\
முப்படைகளுக்கு ஒரே தலைமை தளபதி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முப்படைகளுக்கு ஒரே தலைமை தளபதி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முப்படைகளுக்கு ஒரே தலைமை தளபதி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பான தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, “முப்படைகளின் தலைமைத் தளபதி, ராணுவ விவகார துறைக்கும் தலைவராக இருப்பார்” என்றார். இந்த பதவியில், தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com