மக்களவை தேர்தல் 2024 | “சனாதனத்திற்கு எதிராக பேசுவோரை காங்கிரஸ் கண்டிக்கவில்லை” - கௌரவ் வல்லப்

“சனாதனத்திற்கு எதிராக பேசக்கூடியவர்களை காங்கிரஸ் கட்சி கண்டிக்காமல் இருக்கிறது. அதனால் என்னால் இனியும் காங்கிரஸ் கட்சியில் தொடர முடியாது” எனக்கூறியுள்ள அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லப், அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார்.
கௌரவ் வல்லப்
கௌரவ் வல்லப்ட்விட்டர்

பொருளாதார பேராசிரியரான கௌரவ் வல்லப் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். ஊடகங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவாதங்களில் கலந்து கொள்ளும் நபராக பலருக்கும் அறியப்பட்டவர். தேசிய செய்தி தொடர்பாளராக அவருக்கு பொறுப்பு கொடுத்திருந்தது காங்கிரஸ்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு ஜம்ஷெட்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் உதய்ப்பூர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் தாராசந்த் ஜெயின் இடம் சுமார் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். எனினும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர் தற்பொழுது கட்சியில் இருந்து விலகுவதாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விற்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

கௌரவ் வல்லப்
மக்களவை தேர்தல் 2024 | மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி!

அவர் எழுதியுள்ள கடிதத்தில் "நாட்டின் மிகப் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சி இளைஞர்களின் திறமைக்கும் யோசனைகளுக்கும் மதிப்பு வழங்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எனது இந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியுள்ளது. காரணம், மக்களுடனான கட்சியின் தொடர்பு முற்றிலுமாக உடைந்து போய் இருக்கிறது.

ஆட்சியாளர்களாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களது பணியை சரியாக செய்ய முடியாத கட்சியாக, தொண்டர்களிடம் நெருங்கி போக முடியாத நிலையில்தான் காங்கிரஸ் கட்சி இப்போது இருக்கிறது. கட்சியின் மேலிட தலைவர்களுக்கும் கீழ்மட்ட தொண்டர்களுக்கும் இடையில் இனிமேல் பாலத்தை உருவாக்குவது என்பது மிக கடினமான காரியம். இது சரிசெய்யப்படாமல் எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு எனக்கு அதிருப்தி அளித்துள்ளது. பிறப்பில் இந்துவாக இருக்கும் எனக்கு கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணி கட்சியில் இருக்கக்கூடியவர்கள் சனாதனம் குறித்து விமர்சித்து பேசும்போது காங்கிரஸ் கட்சி அதை கண்டிக்கவில்லை. இதை அமைதியாக கடந்து போவது, அத்தகைய பேச்சுகளுக்கு கட்சி துணை போவதை போல உள்ளதென நான் கருதுகிறேன். இதுபோன்ற காரணங்களால், இனியும் இங்கு என்னால் தொடர முடியாது” என்று கூறி முழுமையாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கௌரவ் வல்லப்
“நாட்டின் பிரச்னைகளை திசைதிருப்ப என் சனாதன பேச்சை பயன்படுத்துகிறது பாஜக” - உதயநிதி

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இவரது பெயரை தகவல் தொடர்பு குழு, சமூக வலைதள ஒருங்கிணைப்புக்குழு உட்பட பல குழுக்களில் காங்கிரஸ் கட்சி சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com