டி கே சிவக்குமார், நர லோகேஷ்
டி கே சிவக்குமார், நர லோகேஷ்pt web

ஆந்திராவில் கூகுள் ’AI Hub’.. வார்த்தை விடும் நர லோகேஷ்.. கர்நாடக அரசியலில் வெடித்த சர்ச்சை

பெங்களூருவில் சாலைகள் மோசமாக இருப்பதாக தொழிலதிபர்கள் தெரிவிக்கத் தொடங்கிய நிலையில், ஆந்திர பிரதேசத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நர லோகேஷ் விசாகப்பட்டினம் சிறந்த மாற்றாக இருக்குமெனத் தெரிவிக்கத் தொடங்கினார்.
Published on

ஆந்திரா Vs கர்நாடகா.. வெடித்து கிளம்பும் புதிய மோதல்!

பெங்களூருவில் சாலைகள் மோசமாக இருப்பதாக தொழிலதிபர்கள் தெரிவிக்கத் தொடங்கிய நிலையில், ஆந்திர பிரதேசத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நர லோகேஷ் விசாகப்பட்டினம் சிறந்த மாற்றாக இருக்குமெனத் தெரிவிக்கத் தொடங்கினார். அதோடு ஆந்திராவை முதலீட்டுக்கான மையமாக முன்வைத்து லோகேஷ் தீவிரமாகப் பரப்புரையும் செய்து வருகிறார். இந்நிலையில்தான் புதுப்பஞ்சாயத்தும் வெடித்திருக்கிறது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுமுகநூல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.1.3 லட்சம் கோடி முதலீட்டில் கூகுள் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்க இருப்பது, ஆந்திராவை மறுஉருவாக்கம் செய்யும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் திட்டத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஒருகாலத்தில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் அங்கமாக இருந்த ஹைதராபாத்தை இந்தியாவின் ஐடி மையமாக மாற்றிய பெருமை சந்திரபாபு நாயுடுவுக்கு உண்டு. ஆனால், தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு ஹைதராபாத்தை இழந்த ஆந்திரா, வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்தது.

டி கே சிவக்குமார், நர லோகேஷ்
மருத்துவம் படித்தது கொலை செய்யவா?? மனைவி மரணத்தில் சிக்கிய டாக்டர்! சோதனையில் வெளிவந்த பகீர் உண்மை

கூகுளின் மெகா முதலீடு.. சந்திரபாபு நாயுடுவின் புதிய பயணம்

இந்த வரலாற்றுத் தொய்வுக்குப் பிறகு, மீண்டும் ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் முக்கிய நகரங்களை அதன் தொழில் வாய்ப்புகளின் அடிப்படையில் மறுகட்டுமானம் செய்யத் தொடங்கினார். இதன் நீட்சியாகதான் ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டுக்குள் அதானி, பிபிசிஎல், எல்ஜி உட்பட ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். இந்த வரிசையில் கூகுளின் மெகா முதலீடு, ஆந்திராவை மறு உருவாக்கம் செய்யும் அவரது தீவிர முயற்சியின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகிறது.

உலகின் முக்கிய ஏஐ தொழில் மையங்களில் ஒன்றாக இந்தியா வளரத் துடிக்கும் நேரத்தில், கூகுளின் இந்த முதலீடு ஆந்திராவை இந்தியாவின் ஏஐ மையமாக மாற்றும் வாய்ப்பை வழங்குகிறது. தொழில் வளமிக்க அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகியவற்றுக்கு மத்தியில், தனதுஅரசியல் மற்றும் நிர்வாகத் திறமையைப் பயன்படுத்தி நாயுடு இந்த மெகா முதலீட்டை ஈர்த்திருப்பது, தென்னிந்தியப் பொருளாதார அரங்கில் ஆந்திராவை வலிமையாக முன்னிறுத்துகிறது.

கூகிள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை,  விசாகப்பட்டினத்தில் நாட்டின் முதல் கூகிள் AI ஹப் அமைக்கும் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். இது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

டி கே சிவக்குமார், நர லோகேஷ்
ரஜினிகாந்த் - சுந்தர் சி கூட்டணி மீண்டும் இணைகிறதா? | Rajinikanth | Sundar C

தவறவிட்டதா கர்நாடகா.. வெடித்த சர்ச்சை.. காங்கிரஸ் கொடுத்த விளக்கம்!

இந்நிலையில், ஆந்திராவில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்க இருப்பது கர்நாடகத்தில் புயலைக் கிளப்பி இருக்கிறது. இந்த செய்திகள் வெளிவந்த சில மணி நேரங்களுக்குள், இந்த வாய்ப்பை பெங்களூரு இழந்ததற்கு காங்கிரஸ் அரசே காரணம் என்று ஜனதா தளம் (மதச்சார்பற்ற)  கடுமையாக விமர்சித்தது. தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைமையகமாக கருதப்படும் பெங்களூருவில், காங்கிரஸ் அரசு வணிகச் சூழலை உருவாக்கத் தவறியதால் இந்த $15 பில்லியன் (சுமார் ₹1.3 லட்சம் கோடி) முதலீட்டை இழந்ததாக ஜேடி(எஸ்) குற்றம் சாட்டியுள்ளது. "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, 'சிலிக்கான் சிட்டி' என்றழைக்கப்படும் பெங்களூரு மீது ஒரு நிழல் படர்ந்துள்ளது. நகரத்தில் உள்ள பள்ளங்கள்  மற்றும் ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கேவின் அலட்சியமே ₹1.3 லட்சம் கோடி முதலீட்டுத் திட்டத்தை கர்நாடகா இழக்கக் காரணம்" என்று ஜேடி(எஸ்) கூறியுள்ளது.

இந்த முதலீடு கர்நாடகாவில் செய்யப்பட்டிருந்தால், 30,000 வேலைவாய்ப்புகளையும் ஆண்டுக்கு ₹10,000 கோடி வருவாயையும் ஈட்டியிருக்கும் என்று ஜேடி(எஸ்) வருத்தம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் ஐடி-பிடி அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோரின் அலட்சியமே இந்த இழப்புக்குக் காரணம் என்று ஜேடி(எஸ்) குற்றம் சாட்டியுள்ளது.

டி கே சிவக்குமார், நர லோகேஷ்
சோதனைகளைக் கடந்து சாதிக்குமா அரட்டை? ஶ்ரீதர் வேம்பு உடன் ஓர் EXCLUSIVE!

இதுதான் காரணம்.. பிரியங் கார்கே ஆவேசம்

கூகுளின் முதலீடு தொடர்பாக கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே கருத்து தெரிவித்திருக்கிறார். ஆந்திர அரசு கூகுளுக்கு, வரி, மானியங்கள் போன்ற மிகப்பெரிய சலுகைகளை அளித்து முதலீட்டை ஈர்த்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார்
கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார்முகநூல்

முன்னதாக இது தொடர்பாகப் பேசிய அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “ஆந்திராவுக்குச் செல்பவர்களை நாம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அதிக சலுகைகள் வழங்கப்படுவதால் அவர்கள் செல்கிறார்கள் என்றால், அவர்களை விட்டுவிடுங்கள். அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வார்கள். உள்கட்டமைப்பு, மனித வளம், புதுமை மற்றும் ஆராய்ச்சியில், நாட்டின் எந்த நகரமும் பெங்களூருவை ஈடு செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாகப் பேசியிருக்கும் நர லோகேஷ், "அவர்கள் (கர்நாடக அரசு) திறமையற்றவர்களாக இருந்தால், நான் என்ன செய்ய முடியும்? அவர்களின் சொந்த தொழிலதிபர்கள் உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதாக கூறுகிறார்கள்... மின்வெட்டு உள்ளது. அவர்கள் முதலில் அந்தப் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும்," என்று தெரிவித்திருக்கிறார்.

டி கே சிவக்குமார், நர லோகேஷ்
தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு.. அடேங்கப்பா இவ்ளோவா..! | gold price today | #gold

வார்த்தையை விட்ட நர லோகேஷ்.. வெடிக்கும் வார்த்தை மோதல்!

இதற்கிடையே ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “Vizagல் உள்ள G இப்போது கூகுளைக் குறிக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே கர்நாடக அரசு பெங்களூருவின் சாலை வசதி மற்றும் அதன் கட்டமைப்புகளுக்காகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இது தொடர்பாக பேசியிருக்கும் அம்மாநில அமைச்சர்கள், நகரத்தை மேம்படுத்த கூட்டு முயற்சி தேவை என்றும், பிரச்னைகளை சரிசெய்ய நேரம் எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்தான் தற்போது இந்த விவகாரமும் வெடித்திருக்கிறது.

இந்நிலையில்தான் நர லோகேஷ் புதிதாக ஒரு பதிவையும் பதிவிட்டு இருக்கிறார். அதில், “ஆந்திரா உணவு காரமானது என்று சொல்வார்கள். நம் முதலீடுகளும் கொஞ்சம் அப்படித்தான் போல இருக்கிறது… அண்டை மாநிலத்தவர்கள் அந்த காரத்தால் எரிச்சலடைந்து !” எனத் தெரிவித்திருக்கிறார்.

டி கே சிவக்குமார், நர லோகேஷ்
இன்பன் படம் இயக்குகிறேனா? சிறு தெய்வ காட்சிகள் ஏன்? - மாரி செல்வராஜ் பதில்கள் | Mari Selvaraj

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com