தங்கத்தை விடுங்க... வெள்ளி விலை ஏற்றத்தை கவனிச்சீங்களா..?

வெள்ளிக்கு மேலும் மதிப்பு: முதலீட்டில் தங்கத்தை விட நல்லதா?
Silver Price Hike
Silver Price HikeImage by Paul ( PWLPL) from Pixabay

வெள்ளிதான் அடுத்த தங்கமா?

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து எட்டாக்கனியாக இருக்கும் சூழலில் வெள்ளியை வாங்கலாமா என பலர் எண்ணுகின்றனர். தங்கம் போலவே வெள்ளியும் ஏற்றம் பெறுமா? அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று இங்கு பார்க்கலாம் . 

வெள்ளியின் பயன்பாடு

Silver Price Hike
Silver Price Hike

தங்கத்தைப் போல் இல்லமால் வெள்ளி தொழில்துறையில் அதிகமாக பயன்படுகிறது. வெள்ளி உற்பத்தியில் கிட்டத்தட்ட 40% மேல் தொழில்துறைக்கு செல்கிறது. மொபைல், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருள்களிலும் , எலக்ட்ரிக் கார், சோலார் போன்ற வளர்ந்து வரும்  தொழில்களிலும் இதன் பயன்பாடு மிக அதிகம் . ஒரு சராசரி காரை விட எலக்ட்ரிக் கார் தயாரிக்க 2 மடங்கு வெள்ளி தேவைப்படுகிறது. இந்த ஆண்டு 1.4 பில்லியன் அவுன்ஸ் வெள்ளியின் தேவை இருக்கும் என்று சில்வர் இன்ஸ்டிடியூட் கணிக்கிறது . இந்த அளவு தேவை, வரலாற்றில் இதற்கு முன் ஒரு முறை மட்டுமே இருந்து உள்ளது.

வெள்ளியின் மதிப்பை  நகர்த்திச் செல்வது எது?

வெள்ளியின் விலையை நகர்த்திச் செல்வது உற்பத்தி துறையின் வளர்ச்சி, உலக பொருளாதார சூழ்நிலை , பணவீக்கம் மற்றும் "தேவை & உற்பத்தி" (Demand & Supply). உற்பத்தி துறை வளரும் போதும், பணவீக்கம் உயரும் போதும் வெள்ளியின் விலையும் உயர்கிறது .  கடந்த சில ஆண்டுகளாக  EV & சோலார் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக வெள்ளியின் தேவை அதிகரித்து வருகிறது ஆனால் வெள்ளியின் உற்பத்தி அந்த தேவையை ஈடு செய்ய முடியவில்லை. மெக்ஸிகோ & பெரு ஆகியவைதான் உலகின் முன்னணி வெள்ளி உற்பத்தி நாடுகள் . அங்கே உள்ள சுரங்கங்களில் உற்பத்தி சில ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்து உள்ளது. உற்பத்தி குறைவும் வெள்ளி விலை ஏறுவதற்கு காரணமாக உள்ளது.

கடந்த காலங்களில் வெள்ளியின் விலை - ஒரு பார்வை

Silver Price
Silver Price Source: Silverprice.org

கடந்த 30 ஆண்டுகால வெள்ளியின் விலை நகர்வை (டாலரில்) பார்த்தோம் என்றால் முதல் 10 ஆண்டுகள் எந்த முன்னேற்றமும் இல்லமால் பக்கவாட்டில் நகர்ந்து இருக்கும் . அடுத்த 6 ஆண்டில் மிகப்பெரிய விலை உயர்வையும் அடுத்த 7 ஆண்டுகளில் இறக்கத்தையும், கடந்த 6-7 ஆண்டுகளாக சிறிது உயர்ந்து வர்த்தகமாவதை காணலாம். அதே சமயம் இந்தியாவில் வெள்ளியின் விலை கணிசமாக ஆண்டுக்காண்டு  உயர்வதை கீழ் உள்ள அட்டவணையில்  காணலாம். இங்கேயும் 2012 இல் இருந்து 2018 வரை வெள்ளி விலை குறைந்தே வர்த்தகம் ஆனதையும் காணலாம் .

Gold Silver Comparison
Gold Silver ComparisonSource RBI

தங்கம் vs வெள்ளி

தங்கத்தை விட வெள்ளி சிறந்த முதலீடா என்றால், இல்லை என்றே சொல்லலாம். தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளியின் விலை தொழில் துறையின் வளர்ச்சியை ஒட்டியே உள்ளது. தங்கத்தை விட அதிக அளவில் விலை ஏற்ற இறக்கம் உடையது. எனவே வெள்ளியை குறைந்த விலையில் வாங்குவது அவசியம் .

Silver Price Hike
தங்கம் ஏன் சார் இப்படி ஏறுது... தங்கத்தில் முதலீடு செய்யலாமா..?

போர்ட்போலியோ diversification செய்ய, பங்குகளுக்கு பதிலாக தங்கம் ஒரு சிறந்த மாற்றாக உள்ளது. தங்கமும் நிப்டி க்கும் இடையிலான தொடர்பு -23% உள்ளது அதுவே வெள்ளி +3% ஆக உள்ளது .  அதாவது வெள்ளியின் வளர்ச்சி நிப்டியின் வளர்ச்சியை ஒட்டி உள்ளது, இதனை பங்குகளுக்கு மாற்றாக கருத முடியாது. எனவே தங்கம் தான் சிறந்த மாற்று (For diversification). 

வெள்ளியை எப்போது வாங்கலாம் 

Gold/Silver ratio

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையை ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையால் வகுத்தால் கிடைப்பதுதான் இந்த Gold/Silver ratio. எப்போது இது 80க்கு மேலாக இருக்கிறதோ அப்போது குறுகிய காலத்தில் தங்கத்தை விட வெள்ளி நன்றாக விலை ஏற வாய்ப்பு அதிகம் . இந்த கட்டுரை எழுதும் போது அது 83.3. இது ஒரு கருவி மட்டுமே , இதை வைத்தே வாங்க முடிவு செய்ய கூடாது .

Gold/Silver ratio
Gold/Silver ratioSource: Goldsilver.com

வெள்ளியை எப்படி வாங்கலாம் :

வெள்ளியை அணிகலன்களாக வாங்குவதை விட ETF or  FoF (mutual fund ) ஆக வாங்கலாம். இதற்கு purity பற்றிய கவலை , செய்கூலி கிடையாது , பாதுகாப்பு , சிறிய அளவிலும் வாங்கலாம் என்ற சில காரணங்கள் உண்டு. FoF உடன் ஒப்பிடும் போது expense ratio ETF இல் குறைவு. ஆனால் வெள்ளி ETF அறிமுகமாகி சில ஆண்டுகளே என்பதால் எளிதில் விற்று பணமாக்கி கொள்ள முடியுமா (Liquidity) என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும் . ETF வாங்க  டீமேட் கணக்கு தேவை & FoF வாங்க டீமேட் தேவை இல்லை .

வரி

வெள்ளி ETF or FoF வாங்கி 3 ஆண்டுகளுக்குள் விற்கும் போது குறுகிய கால வருமானமாக கருதப்பட்டு உங்கள் income tax  slab க்கு  ஏற்றவாறு வரி செலுத்த வேண்டும் . அதுவே 3 ஆண்டுகள் கழித்து விற்கும்போது லாபத்திற்கு  20% வரி கட்ட வேண்டும் . ஆனால் இதில் indexation benefits உண்டு .   

Summary

DSP mutual fund, வெள்ளியின் விலை சீனா பொருளாதார சுணக்கத்தால் தங்கத்தை விட கொஞ்சம் இறக்கத்தில் வர்த்தகம் ஆகிறது . இது மாறும் போது வெள்ளியின் விலை தங்கத்தை விட குறுகிய காலத்தில் உயரலாம் என்று கணிக்கிறது . 

தங்கமோ வெள்ளியோ முதலீடு செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசித்து முடிவை எடுங்கள் .  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com