\
Gold Prices Plunge After Diwali Will the Fall Continue
goldANI

தங்கம் விலை சரிவுக்கு நான்தான் காரணம்! பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி!

தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அதற்குத் தான் விடுத்த வேண்டுகோளே காரணம் எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. அப்படி என்ன நடந்தது? விலை சரிவுக்கும் மோடியின் வேண்டுகோளுக்கும் என்ன தொடர்பு? விரிவாகப் பார்க்கலாம்...
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்

இந்தியாவில் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி,

அடுத்த ஓராண்டுக்குத் தேவையில்லாமல் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். தங்கம் இறக்குமதிக்காக அதிக அளவில் செலவிடப்படுவதால், நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று நாட்டு மக்களிடம் வலியுறுத்தியிருந்தார். அதன் பிறகும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், விலை தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகவே நீடித்து வந்தது.

pm modi
pm modireuters

இந்நிலையில், கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 92 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால், மக்கள் மீண்டும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தின் விலை சரிவுக்கு அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் காரணமாகக் கூறப்படுகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தேசிய திறன் மேம்பாட்டுப் பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "ஒரு சாதாரண மனிதரான நான் தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நாட்டு மக்களும் அதன்படி தங்கம் வாங்குவதைக் குறைத்தனர். இதனால் தங்கத்தின் விலையும் குறைந்தது. எனது வேண்டுகோளைக் கேட்டதால் தங்களது பணம் சேமிக்கப்பட்டதாக மக்கள் தற்போது என்னிடம் தெரிவிக்கின்றனர்" என்று பெருமிதத்துடன் பேசியிருந்தார்.

இதற்கிடையே, தங்கத்தின் விலை சரிவால் ஏற்பட்டுள்ள சூழலைச் சுட்டிக்காட்டி, டெல்லியைச் சேர்ந்த Chamber of Trade and Industry (CTI) என்ற வர்த்தக அமைப்பு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது.

Gold glitters on the floor instead of kolam! Netizens are speechless
GOLDREUTERS

அந்தக் கடிதத்தில், தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோள் பல நகை வியாபாரிகள், சிறு வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களைப் பெரும் நஷ்டத்திலிருந்து காப்பாற்றியுள்ளளார், அப்போது ஒரு கிலோ தங்கத்தின் விலை சுமார் 1.90 கோடி ரூபாயாக இருந்துள்ளது. தற்போது அது சுமார் 1.25 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிலோவுக்கு சுமார் 65 லட்சம் ரூபாய் அளவுக்குச் சரிவு ஏற்பட்டுள்ளதாக CTI தெரிவித்துள்ளது.

அந்த நேரத்தில் வியாபாரிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்திருந்தால், தற்போது பெரும் நஷ்டத்தைச் சந்தித்திருப்பார்கள் என்றும், பலர் கடன் சுமையில் சிக்கியிருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டி பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இவ்வாறு தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் சூழலில், பிரதமர் மோடியின் கருத்தும், வர்த்தக அமைப்பான CTI எழுதியுள்ள இந்தக் கடிதமும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன.

Gold Prices Plunge After Diwali Will the Fall Continue
தங்கம் விலை அபார வீழ்ச்சி! தங்க வியாபாரிகள் அதிர்ச்சி! MCX-ல் அதிரடி மாற்றம்!