\
Gold Prices Crash! Will They Fall Below ₹1 Lakh?
GOLDREUTERS

தங்கம் விலை அதிரடி சரிவு! 1 லட்சத்துக்குக் கீழே வருமா?

நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால், விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பதை நேரம் மட்டுமே தீர்மானிக்கும்.
Published on: 

செய்தியாளர் - ஷாலினி மூர்த்தி

நகை வாங்க வேண்டும் என பல மாதங்களாகக் காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தங்கம் விலை திடீரெனக் குறைந்துள்ளது. அதுவும் ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 2,480 ரூபாய் குறைந்திருக்கிறது. தங்கம் விலை ஏன் இவ்வளவு வேகமாகக் குறைகிறது? இனிமேலும் குறையுமா? இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

சர்வதேசச் சந்தையிலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் சரிந்திருக்கிறது. இதற்கு பின்னால் இரண்டு முக்கியமான காரணங்கள் கூறப்படுகிறது,

gold
goldANI

1. அமெரிக்காவின் பொருளாதார நிலைமை.

எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்குப் பதிலாக, அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் உருவாகியிருக்கிறது.

குறிப்பாக வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது வங்கிப் பத்திரங்கள், அமெரிக்க அரசுப் பத்திரங்கள் போன்றவை முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் தரக்கூடும். ஆனால் தங்கத்தை வாங்கி வைத்திருந்தால் அதற்கு வட்டி கிடையாது. அதனால் சில முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து பணத்தை எடுத்து, வட்டி வருமானம் தரக்கூடிய முதலீடுகளுக்குத் திரும்புகிறார்கள். இதுவும் தங்கத்தின் விலை குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

gold
goldANI

2. அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா என்ற சந்தேகம் முதலீட்டாளர்களிடையே உருவாகியிருக்கிறது. இதனால் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருக்கின்றன.

பங்குச் சந்தையில் நஷ்டத்தைச் சந்திக்கும் சில முதலீட்டாளர்கள், தங்களுடைய கடன்களை அடைக்கவும், உடனடியாகப் பணத்தைத் திரட்டவும், தங்கத்தை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கட்டாய விற்பனையும் தங்கத்தின் விலை சரிவுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தற்போது நகை வாங்கக் காத்திருக்கும் பலருடைய கேள்வி. இனிமேலும் தங்கம் விலை குறையுமா? ஒரு சவரன் தங்கம் ₹1 லட்சத்துக்குக் கீழே வருமா? என்பதுதான்.

தற்போதைய சூழலில் தங்கம் விலையில் மேலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவின் பணவீக்கம் எப்படி இருக்கிறது, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறது, சர்வதேசச் சந்தையில் டாலரின் மதிப்பு எப்படி மாறுகிறது, எண்ணெய் விலை எந்தத் திசையில் செல்கிறது எனப் பல விஷயங்கள் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கும்.

Dubai Gold District
Dubai Gold District reuters

இப்போது தங்கம் விலை சரிந்தாலும், சில சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட காலத்தில் தங்கத்தின் விலை மீண்டும் உயரக்கூடும் என்ற கணிப்பை வெளியிட்டிருக்கின்றன.

ஆக, தங்கம் விலை குறைந்திருப்பது நகை வாங்கக் காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகத் தெரியலாம். ஆனால், இந்தச் சரிவு தொடருமா? மீண்டும் விலை உயருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Gold Prices Crash! Will They Fall Below ₹1 Lakh?
டிசம்பரில் தங்கம் விலை என்ன? USA-வில் மிகப்பெரிய மாற்றம்!