\
US Treasury yields fall as markets weigh Fed rate outlook
gold Reuters

டிசம்பரில் தங்கம் விலை என்ன? USA-வில் மிகப்பெரிய மாற்றம்!

தங்கம் விலை டிசம்பர் மாதத்தில் என்னவாக போகிறது என்று சந்தை நிபுணர்கள் பலர், தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

டாலரின் மதிப்பு, சந்தையின் மதிப்பு, அரசியல் தன்மை, போர், அமெரிக்க மத்திய வங்கியின் நிலைப்பாடு என்று பல்வேறு காரணிகள் தான், தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன. இவற்றில் சிறிய மாறுபாடு இருந்தாலும், அவை தங்கத்தின் விலையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன. இப்படியான சூழ்நிலையில், தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றான, அமெரிக்க அரசு பத்திரங்களின் ஈவுத்தொகை குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவின் மத்திய வங்கி தனது வட்டி விகித கொள்கையில், எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அப்படியே தக்க வைத்தது.

gold
goldreuters

இந்த முடிவைத் தொடர்ந்து, அக்டோபர் 29-ஆம் தேதிக்கான காலை வர்த்தகத்தில், அமெரிக்க அரசு பத்திரங்களின் ஈவுத்தொகை ஒட்டுமொத்தமாக சரிவை கண்டுள்ளது. வட்டி விகிதம் உயரும் என்று முதலீட்டாளர்கள் நினைத்திருந்த சூழ்நிலையில், இந்த நகர்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. 10 ஆண்டு கால அமெரிக்க அரசு பத்திரத்தின் ஈவுத்தொகை சுமார் 5 அடிப்படை புள்ளிகள் வரை குறைந்து, 4.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. 2 ஆண்டு கால அரசுப் பத்திரத்தின் ஈவுத்தொகையும் 5 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 4.683 சதவீதமாக குறைந்துள்ளது.

30 ஆண்டு கால அரசு பத்திரத்தின் ஈவுத்தொகை 3 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 5.329 சதவீதமாக குறைந்து, வர்த்தகமாகி வருகிறது. பொதுவாக, மத்திய வங்கியின் ஈவுத்தொகை குறைந்தால், முதலீட்டாளர்கள் அமெரிக்க அரசு பத்திரங்களை விற்பனை செய்துவிட்டு, பாதுகாப்பான முதலீடாக உள்ள தங்கத்தை வாங்க முயல்வார்கள். இதனால், தங்கத்தின் விலை அதிகரிப்பது வழக்கம். அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கையும், தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று உணர்த்துகிறது. ஆனால், பல்வேறு சந்தை நிபுணர்களின் கணிப்பு வேறு ஒன்றாக உள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இதனால், அமெரிக்காவின் மத்திய வங்கி, தனது வட்டி விகிதங்களை டிசம்பர் மாதத்திற்குள் உயர்த்துவதற்கு 80 சதவீதம் அளவுக்கு வாய்ப்பு இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், பாதுகாப்பான லாபம் தரும் அரசுப் பத்திரங்கள் மற்றும் டாலர் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பும். இதனால், தங்கம் மீதான விற்பனை அழுத்தம் அதிகரித்து, சர்வதேச அளவில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே, டிசம்பர் மாதத்தில், தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம், பொதுமக்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

US Treasury yields fall as markets weigh Fed rate outlook
ட்ரம்ப்புக்கு அக்னி பரீட்சை: அமெரிக்க நாடாளுமன்றம் இடைக்கால தேர்தலில் கட்சிகளின் பலம் என்ன?