“கரண்ட் ஷாக் கொடுத்தாங்க!” நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதானவர்கள் கோர்ட்டில் அதிர்ச்சி புகார்

“காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டோம்” என நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறியவர்கள்
நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறியவர்கள்pt web

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, பிற்பகலின்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்த இருவர், வண்ணப் புகைக் குப்பிகளை வீசினர். எம்பிக்கள் சிலர், அவர்கள் இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அதற்குள் அவை காவலர்கள் விரைந்து வந்து அவர்களைப் பிடித்துச் சென்றனர். குற்றம் சாட்டப்பட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன், டி, அமோல் ஷிண்டே, நீலம் ஆசாத், லலித் ஜா மற்றும் லோகேஷ் குமாவத் போன்றோர் டிசம்பரில் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படும் வரை அனைவரும், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் கீழ் இருந்தனர். இந்நிலையில் டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நீலம் ஆசாத் தவிர குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரும், காவல்துறையினரின் வற்புறுத்தலைக் குற்றம் சாட்டி புதன்கிழமை மனுத்தாக்கல் செய்திருந்தனர். இது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர் முன் சமர்பிக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் மனோரஞ்சன், டி. சாகர் சர்மா, லலித் ஜா, அமோஜ் ஷிண்டே மற்றும் மகேஷ் குமாவத் போன்றோர் சுமார் 70க்கும் மேற்பட்ட வெற்று காகிதங்களில் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

லலித்
லலித்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இது குறித்து கூறுகையில், “யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கும், தேசிய அரசியல் கட்சிகளுடனான தொடர்பினை ஒப்புக்கொள்வதற்கு குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சித்ரவதை செய்யப்பட்டு / மின்சார அதிர்வலைகளைக்கு உட்படுத்தப்பட்டனர்” என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவிடம் பதில் கேட்டுள்ள நீதிமன்றம் விசாரணையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் நீதிமன்றப் காவல் மார்ச் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியான நீலம் ஆசாத், பல வெற்று காகிதங்களில் கையெழுத்திடுமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com