gautam adani on 70 hour work week debate
கௌதம் அதானிx page

”நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவிட்டால், உங்கள் மனைவி வீட்டைவிட்டு ஓடி விடுவார்" - அதானி!

"நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவிட்டால், உங்கள் மனைவி வீட்டைவிட்டு ஓடி விடுவார்" என்று work life balance குறித்து அதானி கேலியாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
Published on

இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நாராயணன் மூர்த்தி முன்பு தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாக இன்னமும் இணையத்தில் பெரும் விவாதம் நடைபெற்றுவருகிறது.

வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்தால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும் என்று ஒருதரப்பும், இந்தியா முன்னேற 70 மணி நேரம் வேலை செய்வது அவசியம் என்று மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், work life balance குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அதானி, "வேலை - வாழ்க்கை சமநிலை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு வீட்டில் 4 மணி நேரம் செலவிட்டால் போதுமானது. சிலருக்கு 8 மணி செலவிட வேண்டும். எப்படியாயினும், உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் செய்யும்போது உங்கள் வேலையும் வாழ்க்கையும் சமநிலையுடன் இருக்கும். work life balance குறித்த உங்கள் கருத்தை என் மீதோ, என் கருத்தை உங்கள் மீதோ திணிக்கக் கூடாது. எங்களைப் பொறுத்தவரை, வேலை அல்லது வீடு இதைத் தவிர வேறு உலகம் எங்களுக்குக் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

gautam adani on 70 hour work week debate
70 மணிநேர வேலை | மீண்டும் கிளம்பிய விவாதம்.. சாட்டையடி கொடுத்த பெண் சிஇஓ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com