GAIL weighs supply cuts to gas customers
கெயில்ராய்ட்டர்ஸ்

ஈரான் போர் | எரிவாயு முற்றிலும் நிறுத்தம்.. விநியோகத்தைக் குறைக்கும் கெயில்!

ஈரான்- இஸ்ரேல் போரால் இந்தியாவில் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கான விநியோகத்தை குறைக்கப்போவதாகவும் எரிவாயு நிறுவனமான கெயில் அறிவித்துள்ளது.
Published on

இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாகவும் நன்கு கண்காணிக்கப்படுவதாகவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும், எண்ணெய் மற்றும் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போதுமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதேநேரத்தில், ஈரான்- இஸ்ரேல் போரால் இந்தியாவில் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கான விநியோகத்தை குறைக்கப்போவதாகவும் எரிவாயு நிறுவனமான கெயில் அறிவித்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும், ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி காமேனி மரணத்திற்கு ஈரானின் தாக்குதல் வேகம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் உலகளவில் எண்ணெய் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்தன. உலகின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்றான மத்திய கிழக்கிலிருந்து வரும் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்று வர்த்தகர்கள் கவலைப்படுகிறார்கள். மேலும், தாக்குதல் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான கப்பல் செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதற்கிடையில், இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாகவும் நன்கு கண்காணிக்கப்படுவதாகவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. 2மேலும், எண்ணெய் மற்றும் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போதுமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதேநேரத்தில், உலகளாவிய சந்தைகளை பாதித்துள்ள பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் பெட்ரோல் அல்லது டீசல் விலையை உயர்த்த உடனடி திட்டம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால் வரும் நாட்களில் நிலைமையைப் பொறுத்து நிறைய விஷயங்கள் மாறும் எனக் கூறப்படுகிறது.

GAIL weighs supply cuts to gas customers
கெயில்ராய்ட்டர்ஸ்

இந்த நிலையில், ஈரான்- இஸ்ரேல் போரால் இந்தியாவில் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கான விநியோகத்தை குறைக்கப்போவதாகவும் எரிவாயு நிறுவனமான கெயில் அறிவித்துள்ளது. மேலும், பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனத்திடம் இருந்து கெயில் பெற்று வந்த எரிவாயு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகம் 40% வரை குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024/25ஆம் ஆண்டில் இந்தியா 27 மில்லியன் மெட்ரிக் டன் எல்என்ஜியை இறக்குமதி செய்துள்ளது. இது அரசாங்க தரவுகளின்படி, அதன் ஒட்டுமொத்த எரிவாயு நுகர்வில் பாதி. எல்என்ஜியின் பெரும்பகுதி கத்தாரில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

GAIL weighs supply cuts to gas customers
25 நாட்களுக்கு பயமில்லை.. விலை உயரப்போகும் பெட்ரோல், டீசல்? தீவிரம் காட்டும் இந்தியா!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com