இண்டியா கூட்டணிக்கு விளக்கம் என்ன? பீகாரில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தேர்வில் வெளியான கேள்வி

பீகாரில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தேர்வில் இண்டியா கூட்டணியின் விளக்கம் கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இண்டியா கூட்டணி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி
இண்டியா கூட்டணி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விpt web

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக நிதிஷ் குமா உள்ளார். ஜனதா தளம் தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் உள்ளது.

இந்நிலையில் பீகாரில் உள்ள பீஹார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC) சமீபத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான தேர்வினை நடத்தியது. இத்தேர்வில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் INDIA கூட்டணியின் பெயருக்கு விரிவாக்கம் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்கல்விக்கான இரண்டாம் கட்ட தேர்வில் இக்கேள்வி இடம்பெற்றுள்ளது. மொத்தமாக 150 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் 58-ஆவது கேள்வியாக இடம் பெற்றிருந்த இக்கேள்வி, “சமீபத்தில் உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியாவின் முழு வடிவம் என்ன?” எனக் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கேள்விக்கு அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அம்மாநிலத்தின் பாஜக தலைவர் சாம்ராட் சௌத்ரி இது குறித்து பேசும்போது, “நாட்டில் இண்டியா கூட்டணியைப் பார்க்க முடியாது. ஆனால் பீகாரில் கூட்டணிக் கட்சியினர் தங்களது சொந்த விளம்பரத்தில் பிஸியாக உள்ளனர். இது அவர்களது மனநிலையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசித் நாத் திவாரி, இதுபோன்ற வினாத்தாள்கள் பிபிஎஸ்சியால் தயாரிக்கப்படுகின்றன என்றும் இதில் மாநில அரசு மற்றும் அரசியல் அமைப்புகளின் தலையீடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19-ஆம் தேதி டெல்லியில் மாலை 3 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com