\
BISLERI
BISLERIREUTERS

Bisleri தண்ணீரீல் ஆபத்து? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! FSSAI கண்டுபிடித்தது என்ன ?

மிகவும் பிரபலமான பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாதுகாப்பற்றது என இந்திய உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் அந்தத் தண்ணீரில் பிரச்னை? விரிவாகப் பார்க்கலாம்.
Published on: 
Summary

FSSAI ஆய்வில் Bisleri பாட்டில் தண்ணீரில் Bromate மற்றும் PAHs எனப்படும் ஆபத்தான வேதிப்பொருட்கள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாட்டில் தண்ணீரின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. Bisleri நிறுவனம் மேல்முறையீடு செய்தாலும், மறுபரிசோதனையிலும் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக Bisleri நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI வெளியிட்டுள்ள அறிவிப்பு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Bisleri International நிறுவனத்தின் வளாகத்திலிருந்து 'Packaged Drinking Water' எனப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி ஒன்று ஆய்வுக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியை ஆய்வு செய்தபோது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட Bromate எனப்படும் வேதிப்பொருளின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

fssai
fssaiani

இதையடுத்து, அந்தக் குடிநீர் மாதிரி உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006-ன் கீழ் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த ஆய்வு முடிவை எதிர்த்து Bisleri நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இதையடுத்து, அந்தத் தண்ணீர் மாதிரி மேல்முறையீட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடத்தப்பட்ட மறுபரிசோதனையிலும் Polynuclear Aromatic Hydrocarbons (PAHs) எனப்படும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த மாதிரி மீண்டும் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு குறிப்பிடப்படும் Bromate என்பது குடிநீர் சுத்திகரிப்புச் செயல்முறைகளின்போது உருவாகக்கூடிய வேதிப்பொருளாகும். அதேபோல், PAHs என்பது சில கரிமப் பொருட்கள் முழுமையாக எரியாதபோது உருவாகக்கூடிய வேதிப்பொருட்களின் தொகுப்பாகும். இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகக் குடிநீரில் இருந்தால் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகக் குடிநீரில் இருந்தால் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவேதான், குடிநீரில் இத்தகைய வேதிப்பொருட்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் வலியுறுத்துகின்றன. இந்நிலையில் பிஸ்லெரி பாட்டலில் இத்தகைய வேதி பொருட்கள் வரம்பை விட அதிகளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

BISLERI
BISLERIREUTERS

இதன் தொடர்ச்சியாக, Bisleri International நிறுவனத்தின் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர FSSAI அனுமதி அளித்துள்ளது. பிரபலமான நிறுவனத்தின் குடிநீர் மாதிரியிலேயே இத்தகைய குறைபாடுகள் கண்டறியப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

BISLERI
நோட்டீஸ் அனுப்பும் வங்கிகள்! அடகு வைத்த நகைக்கு ஆபத்தா?விலை குறைந்தாலும் Shock தரும் தங்கம்!
BISLERI
கொளுந்துவிட்டு எரியும் கப்பல்கள்.... வெடித்த ஏவுகணைகள்...ஹார்முஸில் 3 நாட்கள் நீந்திய வீரர்