ஓய்வூதியம்
ஓய்வூதியம்முகநூல்

கணவரின் பென்ஷன் பெற 12 வருடங்களாக சுதந்திர போராளியின் மனைவி போராட்டம்! கிடைக்காமலேயே 95வயதில் மரணம்!

சுல்தான் ராமுவின் மனைவி பர்ஃபி தேவி.. கடந்த 1972 - 2011 வரை சுல்தானுக்கு சுதந்திரப்போராட்டத்திற்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டுவந்துள்ளது. இதனையடுத்தும், இது தொடர்பான சான்றிதழ்களை சுல்தான் ராமு புதுப்பிக்காததால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
Published on

சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்த தனது கணவனின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக கிட்டதட்ட 12 ஆண்டுகள் போராடிய பெண் ஒருவர், இறுதியில் ஓய்வூதியம் பெறாமலே மரணம் அடைந்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் வசித்து வந்த சுல்தான் ராமு என்பவர் சுதந்திரப்போராட்ட வீரர். இவரது மனைவி பர்ஃபி தேவி.. கடந்த 1972 - 2011 வரை இவருக்கு சுதந்திரப்போராட்டத்திற்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டுவந்துள்ளது. இதனையடுத்தும், இது தொடர்பான சான்றிதழ்களை சுல்தான் ராமு புதுப்பிக்காததால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான், 2012 ஆம் ஆண்டு சுல்தான் ராமு காலமானார். விதிகளின்படி,சுல்தான் ராமு இறந்தபிறகு அவரது மனைவி பர்ஃபி தேவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். இதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தில் விண்ணப்பித்துள்ளார் பர்ஃபி தேவி.

இதற்கான பணிகள் ஒருபுறம் தொடர்ந்து வந்துள்ளது..ஆனால், தொழில்நுட்ப கோளாறு, சுல்தான் ராமு மற்றும் பர்ஃபி தேவி ஆகியோரின் பெயர்களில் இருந்த பிழை போன்றவை மேலும், ஓய்வூதியம் பெறுவதை தாமதம் படுத்தியது.

மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து இறந்த கணவரின் பெயர் சுல்தான் சிங்கா அல்லது ’சுல்தான் ராம்’ஆ என்றும், பர்ஃபி தேவியா அல்லது பெர்ஃபி தேவியா என விளக்க கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.. காரணம் சுல்தானின் வங்கி கணக்கு , பேன் கார்டு போன்றவற்றில் பெயர்களில் குழப்பம் நிலவியுள்ளது. இப்படி தொடர்ந்து ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே போக.. கிட்டதட்ட பல வருட போராட்டத்திற்கு பிறகும் ஓய்வூதியம் கிடைத்தப்பாடில்லை.

இந்தநிலையில்தான், 2023 செப்டம்பரில் பஞ்சாப் மற்றும் உயர்நீதீமன்றத்தை அணுகி தனது ஓய்வூதியத்தை பெற வழிவகை செய்யுமாறு மனு ஒன்றினை அளித்துள்ளார் பர்ஃபி தேவி. இதனை விசாரித்த நீதிமன்றம்,இதில் பதிலளிக்காததால் மத்திய அரசுக்கு ஏப்ரல் 24 ஆம் தேதி ரூ,15,000 மற்றும் ஜூலை 24 ஆம் தேதி 25,000 அபராதத்தையும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இந்நிலையில், இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தாமதப்படுத்தியதற்கான பதிலையும் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு.

இந்தநிலையில்தான், டிசம்பர் 13 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தள்ளிவைப்பட்டுள்ளது.

ஆனால், வழக்கு விசாரணை வரும்முன்பே, நவம்பர் 8 ஆம் தேதி பர்ஃபி தேவி மரணம் மடைந்துவிட்டார் என்று செய்தி வந்துள்ளது.

தனது தாயின் மரணத்தை குறித்து, மகள் சுமித்ரா தெரிவிக்கையில், “தேசத்திற்கு சேவை செய்து பெருமையுடன் மரணமடைந்த எனது தந்தையின் ஓய்வூதியம் தற்போது வரை எங்களுக்கு கிடைக்கப்படவில்லை. இந்த வேதனையாலேயே எனது தாய் இறந்துவிட்டார்.. இவர் எப்போது இறப்பார் என்றே ஓய்வூதியத்தை வழங்கு மையம் காத்துக்கொண்டிருந்துள்ளது.. எல்லா விதமாண ஆவணங்கள் அவரிடம்ச ரியாக இருந்தது. ஆனால், இறுதிவரை ஓய்வூதியம் கிடைக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம்
லாப நோக்கத்திற்காக ஊழியர்களுக்கு சட்டவிரோத விசா! Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்.. USA அதிரடி!

இப்படி, கிட்டதட்ட 12 வருடங்களாக ஓய்வூதியத்தை பெற போராடிய பர்ஃபி தேவி , இறுதியில் தனது 95 வயதில் மரணமடைந்த செய்தி கேட்போரை கண்கலங்கவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com