carpt desk
இந்தியா
திருப்பதி: சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்து நான்கு கார்கள் சேதம்
திருப்பதி அருகே வீசிய சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் நான்கு கார்கள் நசுங்கி சேதமடைந்துள்ளன.
மிக்ஜாம் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கடும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே திருப்பதி மலையில் உள்ள பாஞ்சஜன்யம் விருந்தினர் மாளிகை அருகே சூறைக்காற்று காரணமாக பழமையான மரம் முறிந்து விழுந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்கள் சேதமடைந்துள்ளன.
carpt desk
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பக்தர்கள், பொதுமக்கள் யாரும் மரத்தின் கீழ் நிற்க வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம், மரத்தின் கீழ் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.