இந்தியாவில் டயனோசர்? ராஜஸ்தானில் படிமங்கள் கண்டுபிடிப்பு!

ஜெய்சால்மர் புதை படிவங்களில், தாவரங்களை உண்ணும் புதிய டைனோசர் இனத்தின் எச்சத்தை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். அதற்கு தார் பாலைவனத்தின் பெயரை வைத்துள்ளனர்.
dinosaurs
dinosaursFile image

பூமியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக டைனோசர் என்ற இனம் வாழ்ந்து வந்ததாகவும், பூமியில் ஏற்பட்ட காலநிலை மற்றும் இயற்கை பேரழிவுகளால் டயனோசர் இனமானது முற்றிலும் அழிந்ததாகவும் கூறப்படும். இதையொட்டி இப்போதுவரை உலகளவில் பல புவியியல் விஞ்ஞானிகள் டயனோசர் வாழ்ந்ததற்கான ஆதாரஙக்ளை கண்டறியும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

dinosaurs
பார்வை குறைபாடுடைய மாணவர்கள் இத்தனை இன்னல்களுக்கு மத்தியில்தான் கல்வி கற்கிறார்கள்- தீர்வுதான் என்ன?

அப்படியான ஒரு ஆராய்ச்சியில், சீன வடமேற்கு மலைப்பகுதியில் 160 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் படிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் தற்பொழுது டயனோசர் வாழ்ந்ததற்கான படிமங்களை புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லக்னோ ஐஐடியைச் சேர்ந்த ரூர்க்கி மற்றும் இந்திய புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் இணைந்து ஜெய்சால்மரில் நீண்ட கழுத்து கொண்ட தாவரங்களை உண்னும் டைக்ரேயோசொரிட் டைனோசரின் பழமையான புதைபடிவ எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் இந்த கண்டுபிடிப்பானது இந்தியாவில் டைனோசரின் பரிணாம வளர்ச்சில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

International journal publishers of Nature பதிப்பகத்தின் இதழான சயிண்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் ல் வெளியிடப்பட்ட தகவலின் படி, இந்த கண்டுபிடிப்பானது 167 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்றும், இதுவரை கண்டுப்பிடிக்கபடாத புதிய இனத்தைச் சேர்ந்தவை என்றும் தெரிகிறது. விஞ்ஞானிகள் இதற்கு தாரோசரஸ் இண்டிகஸ் என்று பெயரிட்டு இருக்கிறார்கள். தார் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி வட மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் டிக்ரோசோரிட் டைனோசர்களின் புதைபடிவங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள்

2018 ஆம் ஆண்டில் GSI ஆல் தொடங்கப்பட்ட அகழ்வாராய்சி திட்டத்தின் படி ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் உள்ள மத்திய ஜுராசிக் பாறைகளில் ஆய்வை தொடங்கினர். அது தான் இந்த கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்தது என்று பழங்காலவியல் துறையின் தலைவர் பேராசிரியர் சுனில் பாஜ்பாய் கூறியிருக்கிறார். இவர் தன் சக ஊழியரான தேபாஜித தத்தாவுடன் சேர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக புதைபடிவங்களின் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com