பாஜகவில் இணைந்த 18 முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; யார் யார் தெரியுமா?

டெல்லியில் இன்று தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 18 பேர் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த 18 முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பாஜகவில் இணைந்த 18 முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் PT WEB

நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ், தீவிரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்குவது என்பது தொடர்பாகத் தீவிர பேச்சுவார்த்தையை இரு கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. இதனால் தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், மத்திய அமைச்சர்களான எல். முருகன் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என 18க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இன்று இணைந்துள்ளனர்.

அதில் குறிப்பாக,

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் கே வடிவேல்,

கோயம்புத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரைசாமி,

அரவக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி எஸ் கந்தசாமி,

பொள்ளாச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. ரத்தினம்,

சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் சின்னசாமி ,

வலங்கைமான் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோமதி சீனிவாசன்

#BREAKING | முன்ன்ன்ன்ன்ன்னாள் எம்.எல்.ஏக்கள் - எம்.பி பாஜகவில் இணைந்தனர்
#BREAKING | முன்ன்ன்ன்ன்ன்னாள் எம்.எல்.ஏக்கள் - எம்.பி பாஜகவில் இணைந்தனர்

தேனி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் வி ஆர் ஜெயராமன்,

வேடஞ்சத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எம் வாசன்,

புவனகிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி எஸ் அருள்,

காட்டுமன்னார்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் ராஜேந்திரன்,

காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வி முருகேசன்,

கொளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ ரோகிணி,

சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இ வெங்கடாசலம்,

கன்னியாகுமரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன்

காங்கிரஸ் முன்னாள் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் தங்கராஜு,

தேமுதிகவைச் சேர்ந்த திட்டக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே தமிழகம்

சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வி.குழந்தை வேலு

உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

பாஜகவில் இணைந்த 18 முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உதகையில் தனியார் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்!

பின்னர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "சில நேரத்தில் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைப் பொறுத்து சில வார்த்தைகள் வரும். அவ்வாறு சில வார்த்தைகள் டி.ஆர்.பாலுவிடம் இருந்து வந்துள்ளது. அரசியலில் எவ்வளவு காலம் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஆனால் எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். கடந்த 2019 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தன்னுடைய அமைச்சரவையில் பாலுவைச் சேர்க்கவில்லை. காரணம் பாலு ஊழல் செய்துள்ளார்.

பாஜகவில் இணைந்த 18 முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
”தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி எப்போது தருவீர்கள்?”- மக்களவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்பிக்கள்!

நாடாளுமன்றத்தில் தன்னுடைய சொந்த நிறுவனத்திற்கு கேஸ் தர மத்திய அரசின் நிறுவனத்தை influence செய்தார். திமுக பைல்ஸ் பார்ட் - 1 அவரின் ஊழலை வெளியிட்டுள்ளோம். 50 ஆண்டுகளில் அவர் என்ன சாதித்தார்? குடும்ப அரசியல் மூலம் மகனைக் கொண்டு வந்துள்ளார். இதுமட்டும் ஒரு சாதனை என்றால் அந்த அரசியலை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

நாடாளுமன்றத்தில் டி.ஆர் பாலு உரையில் இணையமைச்சர் எல். முருகன் குறுக்கிட்டதாகக் கூறப்படுகிறது, துறை சார்ந்த அமைச்சர் இல்லை என்றால் பேசாதீர்கள் எனக் கூறியிருக்கலாம். ஆனால் unfit என்ற வார்த்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஒரே குடும்பத்தில் கோலோச்சுவது பாஜக அல்ல. அவரின் நிலையைப் பாருங்கள்... உதயநிதியைப் புகழ்ந்து பேசி வருகிறார். 50 ஆண்டுகளில் அவர் சாதித்தது இதைத்தான்.

உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி ஸ்டாலின் பார்த்துக் கும்பிடு போடுவதுதான் பாலுவின் அரசியல் சாதனை. இறைவன்தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

பாஜகவில் இணைந்த 18 முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com