உதகையில் தனியார் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்!

உதகை அருகே உள்ள காந்திநகரில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு
தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு PT WEB

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மனப்பாங்கான பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இன்று திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்குக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தடுப்புச் சுவர் இடிந்துவிழுந்து விபத்து
தடுப்புச் சுவர் இடிந்துவிழுந்து விபத்து

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள், மற்றும் காவல் துறையினர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட மூன்று பேரைப் பத்திரமாக மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு
கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர்! ரத்தம் வழிய புகைப்படம்; மீண்டும் அமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம்

இந்நிலையில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர், ஒப்பந்ததாரரை கைதுசெய்ய வலியுறுத்தி இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com