\
இந்திய விளைபொருட்களை நிராகரிக்கும் வெளிநாடுகள்
இந்திய விளைபொருட்களை நிராகரிக்கும் வெளிநாடுகள்web

தரமற்றதாக மாறுகிறதா இந்திய விளைபொருட்கள்..? நிராகரிக்கும் வெளிநாடுகள்! என்ன நடந்தது?

இந்திய விளைபொருட்களில் சில விளைபொருட்களை வெளிநாடுகள் நிராகரிப்பதால் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Published on
Summary

இந்திய விளைபொருட்கள் மீது உலக சந்தையில் நம்பிக்கை குறைந்து வருவதாக பல சம்பவங்கள் காட்டுகின்றன. பூச்சிக்கொல்லி மருந்து விதிமுறைகள் மீறப்பட்டதாக ஜப்பான், நேபாளம் மாம்பழங்களை நிராகரித்தது. சீனா மரபணு மாற்ற தொழில்நுட்பம் இருப்பதாக கூறி அரிசியை தடுத்தது. ஐரோப்பிய யூனியன் நூற்றுக்கணக்கான பொருட்களை தடைசெய்தது. மசாலா, மஞ்சள், மேகி போன்றவை குற்றச்சாட்டில் சிக்கி, தரச்சிக்கல் விவாதமாகியுள்ளது.

இந்திய விளைபொருட்கள் ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக சிக்கலை சந்தித்து வருகின்றது. பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தும் நடைமுறைகள் சரியாக கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி இந்திய மாம்பழங்கள் இறக்குமதியை ஜப்பான் அண்மையில் நிறுத்தியது. நேபாளம் கூட இதே காரணத்திற்காக இந்திய மாம்பழங்களை வாங்குவதை நிறுத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

சீனா கூட மரபணு மாற்ற தொழில்நுட்பம் காணப்படுவதாக கூறி கடந்த மே மாதம் இந்தியாவிலிருந்து வந்த பாசுமதி அல்லாத அரிசியை ஏற்க மறுத்திருந்தது. ஐரோப்பிய யூனியன் கடந்த 2 ஆண்டுகளில் 450 இந்திய விளைபொருட்களுக்கு தடைவிதித்திருந்தது. பூச்சிக்கொல்லிகள், கன உலோகங்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட கிருமிகளை காரணம் காட்டி அவை நிராகரிக்கப்பட்டிருந்தன. சிலபொருட்கள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் எனக்கூறி நிராகரிக்கப்பட்டிருந்தன.

2ஆண்டுகளுக்கு முன்பு கூட புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பதாக கூறி இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான மஞ்சள் உள்ளிட்ட சில மசாலா பொருட்கள் சர்ச்சையில் சிக்கியிருந்தன. இந்திய விளைபொருட்கள் சில வெளிநாடுகளால் நிராகரிக்கப்படுவது இணையதளங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்திய விளைபொருட்களை நிராகரிக்கும் வெளிநாடுகள்
மேகி பாக்கெட்டில் புழுக்கள்? அதிர்ச்சியடைந்த மக்கள்.. நோட்டீஸுக்கு நெஸ்லே விளக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com