அசாம்: முக்கிய நதிகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டிய வெள்ளம்.. சுமார் 24 லட்சம் பேர் பாதிப்பு

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் முக்கிய நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால் சுமார் 24 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம்pt web

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் அசாம் உள்பட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மலைப் பகுதியான இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மற்ற பகுதிகளை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.

நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத்தை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாதலமான டல்ஹவுசியில் 31 மில்லி மீட்டர் மழையும், மணாலியில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வழக்கமாக 35 மில்லி மீட்டர் அளவுக்கே மழை பதிவாகும் நிலையில், 72 புள்ளி ஒரு மில்லி மீட்டர் அளவுக்கு தற்போது மழை பொழிந்துள்ளது.

இதற்கிடையே தர்மசாலாவில் அதிகபட்சமாக 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பொழிந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்தள்ளது. மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருப்பதால் பல மாவட்டங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம்
மொத்தமாக மாறப்போகும் செம்பாக்கம் ஏரி! இதுதான் திட்டமா.. வடிவமைப்பு, வரைவு திட்டம் தயாரிப்பு

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ள நீரில் வேளாண் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதே போல் உத்தராகண்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்கள் நீரில் மிதக்கின்றன.

அசாமில் பெய்து வரும் கனமழையால் முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதாகவும், சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம் சூழ்ந்ததில் இதுவரை 114 வனவிலங்குகள் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பீகாரிலும் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம்
நேபாள் | கனமழையால் வெள்ளக்காடான காத்மாண்டு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com