\
காத்மாண்டு
காத்மாண்டுபுதிய தலைமுறை

நேபாள் | கனமழையால் வெள்ளக்காடான காத்மாண்டு!

நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு, இடி, மின்னல் உள்ளிட்ட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Published on

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

பிரதான சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இடி, மின்னல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 -ஐ எட்டவுள்ளது.

காத்மாண்டு
ஹாத்ரஸில் 121 உயிரிழப்புகளுக்கு விஷம் தெளித்தது காரணமா? போலே பாபாவின் வழக்கறிஞர் சொன்ன பகீர் தகவல்!

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com