Rescuedpt desk
இந்தியா
கேரளாவில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் ஜேசிபி மூலம் மீட்பு
கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கிய பெண்கள், ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
செய்தியாளர்: சுமன்
கேரள மாநிலத்தின் எர்ணாகுளம், கொச்சி உட்பட பல மாவடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. ஆகவே அங்கே வசிக்கும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
Rescuedpt desk
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த மழையில் சிக்கிய பெண்கள் சிலர், ஜேசிபி உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கேரளா: ஹோட்டலுக்குள் பைக்கை ஓட்டி அடித்துநொறுக்கி அட்டகாசம் செய்த காவலர்! விசாரணையில் வெளிவந்த மோசடி
ஜேசிபி மூலம் அப்பெண்கள் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டு தரைப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.