கேரளா: ஹோட்டலுக்குள் பைக்கை ஓட்டி அடித்துநொறுக்கி அட்டகாசம் செய்த காவலர்! விசாரணையில் வெளிவந்த மோசடி

ஆலப்புழா: பைக்கில் ஆயுதத்துடன் வந்து ஓட்டலை அடித்து நொறுக்கிய காவலர்.
ஹோட்டலை அடித்து நொறுக்கிய போலிஸ்
ஹோட்டலை அடித்து நொறுக்கிய போலிஸ்கூகுள்

ஆலப்புழா: பைக்கில் ஆயுதத்துடன் வந்து ஓட்டலை அடித்து நொறுக்கிய காவலர்.

ஆலப்புழா தெய்வமாதா பள்ளி அருகே வசித்து வரும் கே.எஃப். ஜோசப் என்பவர் அப்பகுதியில் இருக்கும் சங்கனாச்சேரி போக்குவரத்து காவல் நிலயத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் இரு தினங்களுக்கு முன் அப்பகுதியில் இயங்கி வரும் ஹோட்டல் ஒன்றிற்கு வந்து, நான்கு நாளைக்கு முன்னதாக அங்கிருந்து வாங்கிச்சென்று உணவை சாப்பிட்ட அவரது மகனுக்கு ஃபுட் பாய்சன் ஆனதாகவும், பிறகு மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று சரியானதாகவும், ஆகவே... நஷ்ட ஈடு வேண்டும் என கேட்டு ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஹோட்டலை அடித்து நொறுக்கிய போலிஸ்
கேரளா: குடிபோதையில் வீடு பிடிக்கவில்லை என்று தீ வைத்து எரித்த நபர்

இதில் கடை உரிமையாளரான அப்துல் லத்தீப், ஜோசப்பிடம் ஆதாரம் கேட்டுள்ளார். ஆனால் ஜோசப்பிடம், உணவு வாங்கியதற்கான பில்லோ அல்லது மருத்துவமனை பில்லோ ஏதும் இல்லாததால், ஒரு கட்டத்தில் உரிமையாளரை மிரட்டியுள்ளார்.

இதில் உரிமையாளருக்கும் ஜோசப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் ஹோட்டல் உரிமையாளார், ஜோசப் பற்றி போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதில் கோபமடைந்த ஜோசப், தான் கொண்டு வந்த டூவீலரை ஹோட்டல் உள்ளேயே ஓட்டிச்சென்று அங்கிருந்த கண்ணாடி கதவுகளை நொறுக்கியதுடன், மேஜை நாற்காலி என்று அனைத்தையும் தான் எடுத்து வந்த ஆயுதத்தால் அடித்து நொறுக்கியிருக்கிறார். இதில் அங்கு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் ஜோசப்பின் இத்தகைய செயலைப்பார்த்து அலறியடித்துக்கொண்டு ஓட்டலை விட்டு வெளியேறினர்.

அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல்,
அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல், கூகுள்

அதற்குள்ளாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் ஜோசப்பை கைது செய்து விசாரித்ததில், ஜோசப் போதையில் இருந்தது தெரிந்தது. மேலும் இது வெறும் புரளி என்றும், ஹோட்டல் உரிமையாளரிடமிருந்து பணத்தை பறிப்பதற்காக செய்யப்பட்ட ஒரு முயற்சி என்று போலிசார் ஜோசப்பை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com