அப்பளம் போல நெருங்கிய கார் : மரண ஓலமிட்ட குடும்பம் :நெஞ்சை உலுக்கும் கோர விபத்து!
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே புதலாப்பட்டு டு நாயுடுபேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே சென்ற கண்டெய்னர் லாரியை முந்த முயன்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் லாரிக்கு அடியில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சிக்கிய நபர்கள் மரண ஓலமிட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் அப்பளம் போல நொறுங்கியதால் அவர்களை பல மணி நேரம் போராடி போலீசார் மீட்டுள்ளனர்.
இந்த கொடூர விபத்தில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், ஓரு சிறுவன் உட்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதமாக உயிரிழந்த காட்சிகள் தான் காண்போரை கண்கலங்க வைத்தது.மேலும் இந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை பல மணி நேரம் போராடி மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காரில் சிக்கி உயிரை விட்ட நபர்களை மீட்கும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரில் பயணித்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.