மகா கும்பமேளா|திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்களின் ஒரு பகுதியில் சிலிண்டர் வெடித்ததால் தீப்பற்றியது. தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட கூடாரங்களுக்கு தீ பரவியது.
உடனடியாக நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கூடாரங்களில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 20 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார். அவரிடம் தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மிகப்பெரிய ஆன்மிக சங்கமான மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.