Headlines: அதிபராக பதவியேற்கும் ட்ரம்ப் முதல் கொல்கத்தா மருத்துவர் வழக்கில் வெளியாகும் தீர்ப்பு வரை!
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழா பிரமாண்டமான முறையில் இன்று நடைபெறுகிறது. உலகத் தலைவர்கள் குவிந்தனர். 1,700 கோடி ரூபாய் செலவில் தடபுடலாக ஏற்பாடுகள் நடைப்பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொலை. விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், திட்டமிட்ட கொலை என விசாரணையில் அம்பலம்.
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் லாரி உரிமையாளர் உட்பட 4 பேர் கைது. மேலும் ஒருவரைத் தேடி வருகிறது திருமயம் காவல்துறை.
புகார் அளித்தவரை காட்டிக் கொடுத்து மோசமான முன்னுதாரணத்தை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக அண்ணாமலை கண்டனம்.
ஜெகபர் அலி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தல். பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று சந்திக்கிறார் விஜய்.
தனியார் மண்டபத்தில் சந்திக்க காவல் துறை அனுமதி தந்துள்ளதாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேட்டி.
பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை போட்டோஷாப் செய்ததாக திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதிவு. புகைப்படம் எடுத்தது உண்மைதான் என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விளக்கம்.
சென்னை பட்டாபிராம் இரட்டை கொலை வழக்கு. துப்பாக்கி முனையில் 5 பேரை கைது செய்த காவல் துறை.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட்ட மக்கள். பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம். சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள்..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவதாக பேசிய விவகாரத்தில் அசாம் காவல்துறை நடவடிக்கை.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
கிரிப்டோ சந்தையை புரட்டிப்போடும் டொனால்டு டிரம்பின் செயல். அறிமுகப்படுத்தப்பட்ட இரு நாட்களில் டிரம்ப் கிரிப்டோ மீம் நாணயத்தின் விலை தாறுமாறாக உயர்வு.
இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் எதிரொலி. ஒப்பந்தப்படி முதற்கட்டமாக மூன்று பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்.
கோ கோ உலகக் கோப்பை போட்டியில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் இந்தியா சாம்பியன். வரலாறு படைத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டு.