டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து!Twitter
இந்தியா
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு
டெல்லி பிதம்புரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் பிதம்புரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் முதல் தளத்தில் தீப்பற்றி எரிந்த நிலையில், அதன் மேல் தளங்களில் கரும்புகை சூழ்ந்தது.
கோப்புப்படம்facebook
தகவல் அறிந்த வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கட்டடத்தில் சிக்கியிருந்த 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் 4 பெண்கள் உள்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.