’பிரதமரின் செங்கோட்டை உரை சலிப்பானது, போலியானது' - காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் !
இந்திய தேசம் முழுதும் இன்று 79-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார். பின்னர் தனது சுதந்திர உரையை நிகழத்தினார்.
இந்நிலையில் பிரதமரின் சுதந்திர தின உரை சலிப்பானதாகவும் போலியானதாகவும் சலிப்பானதாகவும் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:
பழைய கோஷங்கள்:
"விக்சித் பாரத்" "ஆத்மநிர்பார் பாரத்" போன்ற கோஷங்கள் ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன, ஆனால் உண்மையான வளர்ச்சி இல்லை. "மேக் இன் இந்தியா" சிப் பற்றிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, மேலும் பிரதமர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார்.
விவசாயிகளைப் பற்றிய போலி பேச்சு:
மூன்று விவசாய சட்டங்களை வலுக்கட்டாயமாக கொண்டுவர முயன்றதால், விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்த பிரதமரின் பேச்சு போலியானதாக உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான உத்தரவாதம், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது போன்ற உறுதிமொழிகள் எதுவும் இல்லை.
வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்த பேச்சு வெறும் சடங்காக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை திருப்திப்படுத்த முயற்சி:
பிரதமர் ஒற்றுமை குறித்து பேசினாலும், தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களின் சரிவுக்கு அவரே காரணம். மாநிலங்களின் உரிமைகளை அவர் மதிக்கவில்லை.
செங்கோட்டையிலிருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெயரைப் பயன்படுத்தியது, நமது மதச்சார்பற்ற குடியரசுக்கு எதிரானது. இது ஜூன் 4, 2024 நிகழ்வுகளுக்குப் பிறகு, தனது பலவீனத்தை மறைக்கவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை திருப்திப்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு முயற்சி.
பிரதமர் மோடி ஓய்வு பெறுவதற்கான காலம் வந்துவிட்டது:
பிரதமர் இன்று சோர்வாக இருந்தார், விரைவில் அவர் ஓய்வு பெறுவார். அவரது உரையில் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை மற்றும் சமத்துவமின்மை பற்றிய உண்மையான ஏற்றுக்கொள்ளல் இல்லை” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறி