“காசா - பாலஸ்தீன் சந்திக்கும் பிரச்னையை இந்தியாவும் சந்திக்க நேரிடலாம்” - பரூக் அப்துல்லா

பேச்சுவார்த்தைகள் இல்லையெனில் காசா மற்றும் பாலஸ்தீன் சந்திக்கும் பிரச்னைகளை காஷ்மீரும் சந்திக்க நேரிடலாம் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லாpt web

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் குறிப்பிடத்தக்க தீர்வை எட்டவில்லை எனில் காசா மற்றும் பாலஸ்தீன் சந்திக்கும் பிரச்னைகளை இப்பகுதியும் சந்திக்கும் என ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது, “நாம் நண்பர்களை வேண்டுமானால் மாற்றலாம். அண்டை நாட்டினரை மாற்றமுடியாது என முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் கூறியிருந்தார். அண்டை நாடுகளுடன் நட்பாக இருந்தால் இருநாடுகளும் முன்னேற்றம் அடையும். பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடியும் தெரிவித்திருந்தார்.

இதுமாதியான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றபோதிலும் இரு நாடுகளிடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. பாகிஸ்தான் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்னார்கள். ஆனால் நாம் தயாராக இல்லாததற்கு என்ன காரணம்?

காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால், இஸ்ரேல் குண்டுவீசும் காசா மற்றும் பாலஸ்தீனத்தின் கதியை காஷ்மீரும் சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் ரோஜரி பகுதியில் பயங்கரவாதிகளால் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 3 பேர் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com