கர்நாடகாவில் மிளகாய் விலை குறைந்ததால் விவசாயிகள் போராட்டம்; வாகனங்களுக்கு தீ வைப்பு

கர்நாடகா - இந்த வாரம் மிளகாய் விலை குறைந்ததால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மார்க்கெட்டை சூறையாடி வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுக்க வந்த போலீஸையும் விரட்டி அடித்தவர்கள், தீயணைப்பு வாகனத்திற்கும் தீ வைத்துள்ளனர்
கர்நாடகாவில் மிளகாய் விவசாயிகள் வன்முறை
கர்நாடகாவில் மிளகாய் விவசாயிகள் வன்முறைPT

செய்தியாளர் - ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பேடகி பகுதியில் மிளகாய் மார்க்கெட் (விவசாயிகள் சேவா கூட்டுறவு விற்பனை) இயங்கி வருகிறது. சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யக்கூடிய மிளகாயை இந்த மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.

கர்நாடகாவில் மிளகாய் விவசாயிகள் வன்முறை
கர்நாடகாவில் மிளகாய் விவசாயிகள் வன்முறைPT

அப்படி இன்று விவசாயிகள் தாங்கள் விலை வைத்த மிளகாய் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். ஆனால் மிளகாய் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக விலை குறைந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மார்க்கெட்டில் உள்ள நிர்வாக அலுவலகத்தை கற்களை எரிந்து தாக்கினர். மேலும் அலுவலக கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களையும் சூறையாடினர்.

கர்நாடகாவில் மிளகாய் விவசாயிகள் வன்முறை
“தேர்தலை மையப்படுத்தியே சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளது” - எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

இதை அடுத்து அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மார்க்கெட் இயக்குனரின் காரை சூறையாடி தீ வைத்துக் கொளுத்தினர். மேலும் அருகில் இருந்த மேலும் 5 கார்கள், 10 இருசக்கர வாகனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினர்.

வாகனங்கள் எரிந்து அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரியும் வாகனங்களை அணைக்க முயன்றனர். ஆனால் விவசாயிகள் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தீயணைப்பு வாகனத்தை கற்கள், கட்டையால் அடித்து நொறுக்கி, தீயணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

கர்நாடகாவில் மிளகாய் விவசாயிகள் வன்முறை
கர்நாடகாவில் மிளகாய் விவசாயிகள் வன்முறைPT

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் போராட்டத்தில் இருந்த விவசாயிகள் போலீசார் மீது கற்களை வீசி போலீசாரை அங்கிருந்து அவர்களையும் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகிறது.

போராட்டம் எதற்கு?

மிளகாய் விளைச்சல் அதிகரித்ததால் மார்க்கெட்டுக்கு மிளகாய் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள குளிர்பதன கிடங்கு நிரம்பியுள்ளது.

அதன் காரணமாக வாரத்திற்கு மூன்று முறை கொள்முதல் செய்யப்பட்ட மிளகாய், தற்போது வாரத்திற்கு ஒருமுறை மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் விலையும் குறைந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

கர்நாடகாவில் மிளகாய் விவசாயிகள் வன்முறை
கர்நாடகாவில் மிளகாய் விவசாயிகள் வன்முறைPT

கடந்த 4 ம் தேதி மிளகாய் ஒரு குவிண்டலுக்கு 37,000 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் ஒரு குவிண்டலுக்கு ஒரே நாளில் சுமார் 5,000 முதல் 8,000 ரூபாய் வரை வரை விலை குறைந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் மீது ஆத்திரமடைந்த விவசாயிகள் வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com