\
earthquake
earthquakeANI

இடி போல் கேட்ட சத்தம்.. அலறி ஓடிய பொதுமக்கள்! இந்தியாவில் திடீர் நிலநடுக்கம்!

அரியானா மாநிலத்தில் 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Published on: 
Summary

அரியானா மாநிலத்தில் 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் வெளியேறினர். ஆய்வாளர்கள் இதை இயற்கையான நிகழ்வாகக் கூறினாலும், இடி போன்ற சத்தம் மக்கள் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் இல்லை.

செய்தியாளர் - கார்த்திகேயன்

பூமியின் மேல் அடுக்கு ஏழு பெரிய தட்டுகளாகவும், பல சிறிய தட்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தட்டுகள் பூமிக்கு அடியில் இருக்கும் உருகிய மாக்மா மீது மிதந்து கொண்டு இருக்கும். இவ்வாறு மிதந்துக் கொண்டு இருக்கும் தட்டுகள், ஒன்றையொன்று மோதிக் கொண்டாலோ, இரண்டு தட்டுகள் ஒன்றில் இருந்து ஒன்று விலகிச் சென்றாலோ நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 10 ஆயிரம் உயிர்களை காவு வாங்கும் நிலநடுக்கம், உயிர்சேதம் ஏற்படுத்துவதில் இருப்பதிலேயே இரண்டாவது பெரிய இயற்கை பேரிடராக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த இயற்கை சீற்றம் ஏற்பட்டால், பொதுமக்கள் பலத்த சேதங்களை சந்திப்பார்கள். இது சிறிய அளவில் ஏற்பட்டாலும் கூட, மக்களிடையே அச்சம் ஏற்படுவதை தடுக்க முடியாது.

இப்படியான சூழ்நிலையில், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அதாவது, அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில், வெறும் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று, தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் மையப்பகுதி வடக்கு அட்சரேகை 28.386° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 77.258° பகுதியில் அமைந்திருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

earthquake
earthquakeANI

வெறும் 2.9 ரிக்டர் அளவுகோலில் பதிவான சிறிய நிலநடுக்கமாக இது இருந்தாலும், ஒரு மிகப்பெரிய வெடி வெடித்தது போலவும், இடி முழங்கியது போலவும் பயங்கரமான சத்தம் கேட்டதாக, அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆழமற்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் போது, அது உயர் அதிர்வெண் கொண்ட அதிர்வுகளை நேரடியாக மேற்பரப்பிற்கு அனுப்பும்.

இந்த அதிர்வுகள் தரைப்பகுதியை கடந்து, காற்றிலும் எதிரொலிக்கும்போது, மிகப்பெரிய இடி முழங்கியது போன்ற சத்தம் கேட்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது ஒரு இயற்கையான நிகழ்வு தான். பெரும் ஆபத்து எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால், அதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தவொரு உயிர்சேதங்களோ, பொருள் சேதமே ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

earthquake
தீபாவளி நாட்களில் ட்விஸ்ட்! தமிழகத்தை குறிவைக்கும் கனமழை? வானிலை மையம் Warning!