தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்: மிசோரம் மாநிலத்தில் வெற்றி யாருக்கு?

ஐந்து மாநில தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
மிசோரம்
மிசோரம்pt web

ஐந்து மாநில தேர்தகள் அனைத்து மாநிலங்களிலும் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி மிசோரம் மாநிலத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியின் ஜோரம்தங்கா முதலமைச்சராக உள்ளார். இம்மாநிலத்தில் மும்முனைப்போட்டி என்று கூறப்பட்டது. அதன்படி, மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் போன்ற கட்சிகள் கவனம் செலுத்தின.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஜன் கிபாத் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி,

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் 15 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மிசோ தேசிய முன்னணி 10 முதல் 14 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 5 முதல் 9 தொகுதிகளில் வெல்லும் என்றும் பாஜக 0-2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

India TV-CNX வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி,

மிசோ தேசிய முன்னணி 14 முதல் 18 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் 8 முதல் 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பாஜக 0 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பிற கட்சிகள் 12 முதல் 16 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com