PT HEAD LINES
PT HEAD LINESpt web

PT HEADLINES | முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா கோரிக்கை முதல் பழனிசாமி விடுத்த எச்சரிக்கை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் பகுதியில், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா கோரிய முதல்வர் முதல் எடப்பாடியின் எச்சரிக்கை வரை பார்க்கலாம்
Published on
  • இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், இதனை சுட்டிக்காட்டிஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் மோதக்கூடிய தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை என பிகார் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

  • உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம். பி.ஆர்.கவாய் ஓய்வுபெறும் நிலையில் நீதிபதி சூர்யகாந்தை அடுத்த உச்சச் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

  • தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில், குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அனைத்து தலைவர்களின் விழாக்களையும் அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தல்.

  • முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னிலுள்ள நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

PT HEAD LINES
“அந்த மூவரால் ஒன்றுமே செய்ய முடியாது; ஒரு செல்வாக்கும் கிடையாது”- வெளுத்து வாங்கிய கோலாகல ஸ்ரீநிவாஸ்
  • பசும்பொன்னில் டிடிவி தினகரனுடன் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, துரோகத்தை வீழ்த்த பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் தங்களுடன் கரம் கோர்த்துள்ளதாக தினகரன் கருத்து எடப்பாடி பழனிசாமியே தங்கள் எதிரி என்றும் கூட்டாக பேட்டியளித்தனர்.

  • அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை நீக்குவதில் தயக்கமில்லை.... துரோகமிழைத்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை.

  • அதிமுகவிலிருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான் என பழனிசாமியின் எச்சரிக்கைக்கு செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

  • வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக திமுக தலைமையில் நவம்பர் 2ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 உயர்ந்து 90 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காலையில் ஆயிரத்து 800 ரூபாய் சரிந்த நிலையில், மாலையில் உயர்வு.

  • மும்பையில் 17 குழந்தைகளை பிணைக்கைதியாக வைத்த நபரை என்கவுன்டர் செய்தது காவல் துறை. கடத்தல் நபர் போலீஸாரை நோக்கி சுட்டநிலையில், பதிலுக்கு போலீஸ் அவரை என்கவுன்டர் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  • இந்தியாவுக்கு மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி.

PT HEAD LINES
கழுத்தில் பந்து தாக்கி இளம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com