\
Even Moderate Drinking Is Dangerous... A Shocking Warning!
AlcoholReuters

அளவாகக் குடித்தாலும் ஆபத்து தான்.. அதிர வைக்கும் எச்சரிக்கை!!

மதுவுக்கு ‘பாதுகாப்பான அளவு’ இல்லை; சிறிதளவு குடித்தாலும் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Published on

மதுவை அளவாகக் குடித்தால் உடலுக்குப் பாதிப்பில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளது. ஆனால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் வராது’ என்று சொல்லும்படி மதுவில் பாதுகாப்பான அளவே எதுவுமில்லை என்று உலக சுகாதார அமைப்பும் மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர். மது உடலில் எத்தனாலாக மாறி செல்களை நேரடியாகச் சேதப்படுத்துகிறது. அதனால், மிகக் குறைந்த அளவில் குடித்தாலும் கூட புற்றுநோய் வருவதற்கான ஆபத்து இருக்கவே செய்கிறது.

alcohol
alcohol reuters

மாதத்திற்கு இருமுறை குடிப்பதை விட, தினமும் சிறிதளவு அருந்துவது உடலில் 15 மடங்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். மேலும், மதுவில் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இன்றி வெறும் கலோரிகள் மட்டுமே உள்ளன.

எப்போதாவது அரிதாகக் குடிக்கும்போது ஆபத்து குறைவாக இருந்தாலும், அது முற்றிலும் 'பாதுகாப்பானது' என்று சொல்ல முடியாது. முக்கியமாக மன அழுத்தத்தைக் குறைப்பதற்கோ அல்லது தூக்கம் வரவழைப்பதற்கோ மதுவைக் குடிக்கத் தொடங்குவது மிகவும் ஆபத்தானது. இதயப் பிரச்சனை உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எனவே, உடலைப் பாதிப்பிலிருந்து முழுமையாகப் பாதுகாக்க ஒரே வழி, மதுப்பழக்கத்தை முற்றிலுமாக கைவிடுவதுதான்.

Even Moderate Drinking Is Dangerous... A Shocking Warning!
சர்ச்சையாகும் முதல்வரின் சைகை.. ஸ்டாலின் மீதான விமர்சனத்துக்கு குரல் கொடுக்கும் சண்முகம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com