\
PM modi
PM modiweb

பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி... பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
Published on
Summary

பிரான்ஸ் அரசு முறை பயணமாக நீஸ் நகரை அடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் வரவேற்றனர். ஹோட்டல் நெக்ரெஸ்கோவில் இந்திய வம்சாவளியினர் நடத்திய கதக், ஒடிசி, பரதநாட்டியம் நிகழ்ச்சிகளை அவர் ரசித்தார். இன்று பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் சந்தித்து, அவரின் முன்னிலையில் பாரத் இன்னோவேட்ஸ் புத்தாக்க மாநாட்டை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக, பிரான்ஸ் சென்றடைந்தார். பிரான்ஸின் நீஸ் நகரை சென்றடைந்த அவரை, அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் எட்வார்ட் ஜெஃப்ரே, உயர்கல்வித்துறை அமைச்சர் பிலிப்பாப்டிஸ்ட் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹோட்டல் நெக்ரெஸ்கோவை சென்றடைந்த பிரதமருக்கு, அந்நாட்டு வாழ்இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதில், கதக், ஒடிசி, பரதநாட்டியம் உள்ளிட்டவற்றை இடம்பெற்றன. அவற்றை பிரதமர் கண்டுரசித்தார்.

தொடர்ந்து இன்று, பிரான்ஸ்அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடிபேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும்,பிரான்ஸ் அதிபரின் முன்னிலையில் பாரத் இன்னோவேட்ஸ் என்ற புத்தாக்கமாநாட்டையும் அவர் தொடங்கிவைக்கவுள்ளார்.

PM modi
தாக்கப்பட்ட கப்பல்.. எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்.. உயிரைப் பணயம்வைத்த இந்தியர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com