திடீரென்று கொம்பனாக மாறிய கோயில் யானை.. கோரத்தாண்டவத்தால் பதறிய பக்தர்கள்.. அதிர்ச்சி வீடியோ

"யானையை கற்கள் கொண்டு விரட்ட முற்பட்டபோது ஆத்திரமடைந்த யானை, தொடர்ந்து வாகனங்களை தாக்கியது. சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சங்கிலி கொண்டு கட்டப்பட்டது"
elephant attack
elephant attackpt

ஒன்றுமே தெரியாதபடி நின்றுகொண்டிருக்கும் இந்த யானைதான், சற்று முன்னதாக கோயிலுக்கு வந்தவர்கள் அனைவரையும் தனது கோரத்தாண்டவத்தால் கதிகலங்க வைத்தது. ஆம், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் நிகழ்ச்சிக்காக அழைத்துவரப்பட்ட யானை திடீரென மதம் பிடித்ததுபோல் மாறி அங்கிருந்த வாகனங்களை சரமாரியாக தாக்கியது. அங்கிருந்த ஒரு கார் மற்றும் இரண்டு வாகனத்தை தாக்கிய யானை, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடையையும் சேதப்படுத்தியது. இதனால் பதறிப்போனவர்கள், அங்கிருந்து சிதறி ஓடினர்.

அப்போது சிலர், யானையை கற்கள் கொண்டு விரட்ட முற்பட்டபோது ஆத்திரமடைந்த யானை தொடர்ந்து வாகனங்களை தாக்கியது. சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சங்கிலி கொண்டு கட்டப்பட்டது. நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்ட நிலையில், யானையை அதன் பாகன் அழைத்துச் சென்றார். இதனால் பரபரப்புக்குப் பிறகு அங்கிருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com