அடேங்கப்பா..! தேர்தல் பத்திரங்கள் மூலம் 2018-2023 வரை பாஜக பெற்ற நிதி இத்தனை கோடிகளா! மற்ற கட்சிகள்?

2016-2022 வரை ரூ.16,000 கோடி அளவில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
bjp, congress
bjp, congresstwitter

தேர்தல் பத்திரம் திட்டம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! 

தேர்தல் பத்திரங்கள் என்பது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான ஒரு வழிமுறை. இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இதன்மூலம் தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. இந்த திட்டம் தொடர்பான வழக்குக்குத்தான் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில், 2016-2022 வரை ரூ.16,000 கோடி அளவில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2016-2022 வரை ரூ.28,030 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16,437.63 கோடி.

தேர்தல் பத்திரம் மூலம் அதிக வருவாயை ஈட்டிய பாஜக!

தேர்தல் பத்திர முறை அறிமுக செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்த அரசியல் கட்சிகளும் சேர்த்து ரூ.12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி ஈட்டிய கட்சியாக பாஜக உள்ளது. பாஜக இந்த காலகட்டத்தில் மொத்தமாக ரூ.6,566 கோடியை நன்கொடையாக ஈட்டியுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் இது ஏறக்குறைய 60 சதவீதமாகும்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் 2017-18 முதல் 2022 -23 வரை காங்கிரஸ் பெற்ற நன்கொடைகளைவிட பாஜக ஐந்து மடங்கு அதிகமாக நன்கொடைகளை பெற்றுள்ளது
பாஜக
பாஜகfile image

மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் 2017-18 முதல் 2022-23 வரை காங்கிரஸ் பெற்ற நன்கொடைகளைவிட பாஜக ஐந்து மடங்கு அதிகமாக நன்கொடைகளை பெற்றுள்ளது என தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் பட்டியலில் உள்ள மற்ற 30 கட்சிகளின் நன்கொடைகளைவிட மூன்று மடங்கு அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது.

bjp, congress
தேர்தல் பத்திர விற்பனை: அதிக நிதியைத் தட்டித் தூக்கிய பாஜக! 9.5% பெற்ற காங்கிரஸ்!

தேர்தல் பத்திரம் மூலம் நிதி: காங்கிரஸ் 2வது இடம்!

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்தக் கட்சி இந்த காலகட்டத்தில் ரூ.1,123 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. இது மொத்த தொகையில் சுமார் 10 சதவீதமாகும். மூன்றாம் இடம்பிடித்துள்ள திரிணமுல் காங்கிரஸ் ரூ.1,093 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.

ரூ.774 கோடியுடன்பிஜு ஜனதா தளம் கட்சி 4வது இடத்திலும், ரூ.617 கோடியுடன் திமுக 5வது இடத்திலும், ரூ.384 கோடியுடன் பாரதிய ராஷ்டிரிய சமிதி 6வது இடத்திலும், ரூ.382 கோடியுடன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 7வது இடத்திலும் உள்ளன.

காங்கிரஸ்
காங்கிரஸ்pt desk

தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நிதிகள்:

  • பாஜக - ரூ.6,566 கோடி

  • காங்கிரஸ்: ரூ.1,123 கோடி

  • திரிணாமூல்: ரூ.1,093

  • பிஜூ ஜனதா தளம்: ரூ.774

  • திமுக: ரூ.617 கோடி

  • பாரதிய ராஷ்டிரிய சமிதி: ரூ.384 கோடி

  • ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்: ரூ.382 கோடி

  • தெலுங்கு தேசம்: ரூ.147 கோடி

  • சிவ சேனா: ரூ.101 கோடி

  • ஆம் ஆத்மி: ரூ.94 கோடி

  • தேசியவாத காங்கிரஸ்: ரூ64 கோடி

  • மதசார்பற்ற ஜனதா தளம்: ரூ.49 கோடி

  • சமாஜ் வாடி : ரூ.14 கோடி

bjp, congress
‘தேர்தல் பத்திர திட்டம்’ என்றால் என்ன? இதிலுள்ள பிரச்னைகள் என்னென்ன? விரிவான அலசல்!

பாஜக மட்டும் அதிக நிதி பெற்றது எப்படி?

பணமோசடி பரிவர்த்தனைகளில் ஈடுபடும் மிகப்பெரிய தொழிலதிபர்கள் ஆளும்கட்சிக்கு நன்கொடைகளை அள்ளி வீசியிருக்கிறார்கள்

கார்ப்பரேட் நிறுவனங்களால் வாரி வழங்கப்படும் இந்த நன்கொடையாளர்களின் பெயர்கள் மிகவும் ரகசியமான முறையில் வைக்கப்படுகிறது. மேலும், இவர்கள் வருமானவரித் துறையிடம் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை; அத்துடன் அவர்களுக்கு வரிச்சலுகையும் உண்டு. இதைக் கருத்தில்கொண்டே, பணமோசடி பரிவர்த்தனைகளில் ஈடுபடும் மிகப்பெரிய தொழிலதிபர்கள் ஆளும்கட்சிக்கு நன்கொடைகளை அள்ளி வீசியிருக்கிறார்கள்.

தவிர, அதன்மூலம் பலமடங்கு லாபத்தையும் சம்பாதித்து இருக்கிறார்கள். இதனாலேயே மத்தியில் அங்கம் வகிக்கும் பாஜக அரசு, கடந்த ஆண்டுகளில் தேர்தல் பத்திரம் என்ற பெயரில் அதிக நிதியைப் பெற்றுள்ளது. அதேபோல் திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ள மாநில கட்சிகளும் கணிசமாக நிதியை பெற்றுள்ளன” என்கின்றனர் அரசியலாளர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com