’இங்கே கத்தாதீங்க..இது கோர்ட்’ - தேர்தல்பத்திர வழக்கில் வழக்கறிஞரை எச்சரித்த தலைமை நீதிபதி! வீடியோ

தேர்தல் பத்திர வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆதிஷ் அகர்வாலா மற்றும் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை ஆகியோரை தலைமை நீதிபதி எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் ட்விட்டர்

தேர்தல் பத்திரத்தைச் சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக இயற்றப்பட்ட சட்டத் திருத்தங்களை ரத்து செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையும் இன்னும் நடைபெற்று வருகிறது. இன்றுகூட, ‘எஸ்பிஐ வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர, பத்திரங்களின் வரிசை எண்கள் ஏன் இல்லை’ எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், “இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர்கள் பெயர், பத்திர எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும், குறிப்பாக ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண்ணை வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். வெளியிட்ட பின் ‘எந்த தகவலும் விடுபடவில்லை’ என்பதை பிரமாணப் பத்திரமாக எஸ்பிஐ வங்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வழக்கு குறித்து இன்று நடைபெற்ற விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆதிஷ் அகர்வாலா மற்றும் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை ஆகியோர் குறுக்கிட்டனர். இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ‘இங்கே கத்தாதீர்கள்... நீங்கள் நீதிமன்றத்தில் இருப்பதை மறந்து விடாதீர்கள். நீதிமன்றம் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்’ எனக் கடுமையாக கண்டித்ததுடன், "இப்படியே பேசினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்” என எச்சரித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: வர்ராங்க.. கொட்டு வாங்கறாங்க.. போறாங்க.. ரீப்பீட்டு! எஸ்.பி.ஐ Vs உச்சநீதிமன்றம்! என்னதான் நடக்குது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com