சோனியா, ராகுல் தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.751.9 கோடி சொத்துக்கள் முடக்கம்

சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் 751 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சோனியா, ராகுல் காந்தி
சோனியா, ராகுல் காந்தி file image
Published on

நேஷனல் ஹெரால்டு நிறுவன பத்திரிகையின் பங்குகள், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியது. இதில் முறைகேடு நடந்ததாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது.

இதற்கிடையே Associated Journals லிமிடெட் நிறுவனத்தின் 661 கோடியே 69 லட்சம் ரூபாய் சொத்துகளும், Young india நிறுவனம் தொடர்புடைய 90.21 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா, ராகுல் காந்தி
“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?” - பிரியங்கா காந்தி கேள்வி

நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com