கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? முழு அலசல்

மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூட்டணி ஆட்சி- பொருளாதார வளர்ச்சி
கூட்டணி ஆட்சி- பொருளாதார வளர்ச்சிமுகநூல்

1990களுக்கு பிறகு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் வளர்ச்சி வேகக்தை அதிகரித்தன. தற்போது பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் அதற்கு தங்கள் நடவடிக்கைகளே காரணம் என பாஜக கூறுகிறது. அடுத்து இந்தியாவை 3ஆவது பெரிய பொருளாதாரமாக உயர்த்துவதே தங்கள் இலக்கு என பிரதமர் மோடி கூறி வருகிறார்.

அதே நேரம் தனிப்பெரும்பான்மை ஆட்சியை போன்று கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியுமா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காதது வாக்கு எண்ணிக்கை நாளில் தெரியவந்த நிலையில் அன்று பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. எனினும் மோடி தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு அமையும் என்பது உறுதியான நிலையில் சந்தைகள் மீட்சியடைந்தன.

கூட்டணி ஆட்சி- பொருளாதார வளர்ச்சி
“மோடி, அமித்ஷாவின் பேச்சு.. ஏற்றம் கண்டு சரிந்த பங்குச்சந்தை..” - ராகுல் வைத்த பகீர் குற்றச்சாட்டு!

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் என்ற நம்பிக்கைதான் இம்மீட்சிக்கு காரணமாக கூறப்பட்டது. எனினும் தேவ கவுடா மற்றும் ஐ கே குஜ்ரால் தலைமையிலான கூட்டணி அரசுகளிலும் பின்னர் அமைந்த மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசுகளிலும் கூட சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

NDA கூட்டணி
NDA கூட்டணிகூகுள்

மன்மோகன் ஆட்சிக்காலத்தில் 8.1% வரை பொருளாதார வளர்ச்சி இருந்ததாகவும் மோடி அரசில் இது சராசரியாக 5% என்ற அளவுக்கு குறைந்துவிட்டதாகவும் காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இடையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் இதை தவிர்த்துப்பார்த்தால் வளர்ச்சி சிறப்பாகவே இருந்ததாகவும் பாஜக வாதிடுகிறது.

கூட்டணி ஆட்சி- பொருளாதார வளர்ச்சி
காலை தலைப்புச் செய்திகள் | 3-வது முறை பிரதமராக பதவியேற்ற மோடி முதல் இந்திய அணி வெற்றி வரை!

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினாலும், மானியங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு எதிராக அமைந்ததாக பாஜக குற்றச்சாட்டுகிறது.

மோடி, மன்மோகன் சிங்
மோடி, மன்மோகன் சிங்எக்ஸ்

பொருளாதார வளர்ச்சி குறித்து கட்சிகளிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. எனினும் இந்திய பொருளாதாரம் அரசியல் சூழல்களை தாண்டி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் என பெரும்பாலான வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com