தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்web

புதுச்சேரியிலும் ’விசில்’ |தவெகவிற்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Published on
Summary

முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் விசில் சின்னதையே பொதுச்சின்னமாக அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை பொதுச்சின்னமாக அறிவித்து உத்தரவிட்டருந்தது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை என 10 விருப்ப சின்னங்களைக் கோரி தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தவெகவினரின் மிகவும் விருப்பப்பட்ட சின்னமான விசிலையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது. இதற்கு தவெகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தனர்.

தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
காங்கிரஸில் முற்றும் மோதல்| ”கே.சி. வேணுகோபால் ஒரு ரவுடி..” - மணிசங்கர் அய்யர் கடும் தாக்குதல்!

அதேசமயம், தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட ஒரு சில வாரங்களில், சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டது பேசுபொருளாகியிருந்து. திமுகவினர் பயம் காரணமாகவே விசிலை மைதானத்தில் தடைசெய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதேசூழலில் தான், திமுக கவுன்சிலர் ஒருவர் தூய்மைப்பணியாளரிடம் இருந்த விசிலை வாங்கி குப்பையில் வீசிய சம்பவமும் நடந்தது.

திமுக கவுன்சிலர் ஆயுப் கான்
திமுக கவுன்சிலர் ஆயுப் கான்Pt web

இவ்வாறு, விசில் தொடர்ந்து பேசுபொருளாகி வர, தமிழ்நாட்டைத் தொடர்ந்து 30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி என இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பொதுச்சின்னத்தில் களமிறங்குகிறது தவெக.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்த ஒரு தேர்தலுக்கு மட்டுமே விசில் சின்னம் ஒதுக்கியிருப்பதாகவும், அடுத்தடுத்த தேர்தல்களில் சின்னம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
1971 சட்டமன்றத் தேர்தல் | 2வது முறை முதல்வரான கலைஞர் கருணாநிதி.. இன்று வரை தொடரும் சாதனை என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com