ராணுவத்தில் இறந்த தந்தைக்கு ராணுவ உடையில் “ஜெய்ஹிந்த்” எனக் கூறி இறுதி மரியாதை செலுத்திய 6வயது மகன்!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கர்னல் மன்ப்ரீத் சிங்கிற்கு அவரது 6 வயது மகன், ராணுவ உடையில் ஜெய்ஹிந்த் கூறி இறுதிமரியாதை செலுத்தியது காண்போரை கலங்க வைத்தது.

கர்னல் மன்ப்ரீத் சிங்கின் உடல் பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்திற்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. கர்னலின் சொந்த ஊரில் கர்னலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரே துயரத்தில் மூழ்கியிருக்க, அவரது மனைவி, தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இறுதி நிகழ்வில், கர்னல் மன்ப்ரீத்சிங்கின் 6 வயது மகன் கபீர் மற்றும் 2 வயது மகள் பன்னி ஆகியோரும் பங்கேற்றனர். முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், ராணுவ சீருடை போன்று உடை அணிந்திருந்த கபீர், தனது தந்தைக்கு ஜெய்ஹிந்த் எனக்கூறி இறுதி மரியாதை செலுத்தியதை கண்டவர்கள் கண்ணீர் விட்டு கலங்கி அழுதனர்.

துப்பாக்கிக்குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தியபோது கிராம மக்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். 41 வயதாகும் கர்னல் மன்ப்ரீத் சிங், அவரது குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com