டெல்லியில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, “டெல்லியில் அதிகரித்து வரும் இந்த கொரோனா தொற்று அதிகரிப்புதான் தலைநகரின் அதிகபட்ச கொரோனா தொற்று பாதிப்பா எனத் தெரியவில்லை. 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 24,000 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நேற்று 24 மணி நேரத்திற்கு தோரயமாக 19,000 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 24,000 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று அதிகரித்து வருவதால் மத்திய அரசு மேலும் அதிகமான படுக்கைகளை தரவேண்டும். ” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று, டெல்லியில் 19,486 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com