வடமாநிலங்களில் கொதிக்கும் வெப்பம்... டெல்லியை அடித்துத்தூக்கியதா நாக்பூர்? உண்மை என்ன?

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் டெல்லி உள்பட்ட வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
வெப்பம்
வெப்பம்புதியதலைமுறை

கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் அதிகப்பட்ச வெப்பநிலையாக 52.3 டிகிரி செல்ஸியஸ் பதிவான நிலையில், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

டெல்லியைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நாக்பூரில் 52.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதாக நாக்பூரில் இயங்கி வரும் IMD தகவல் வெளியிட்டிருந்தது. இது டெல்லி வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலை என்பதால், மக்கள் அச்சத்துக்குள்ளாகினர்.

வெப்ப கருவி
வெப்ப கருவிபுதிய தலைமுறை

நாக்பூரில் உள்ள அம்பாசாரி சாலையில் அமைந்துள்ள ராம்தாஸ்பேத்தில் உள்ள PDKV க்கு சொந்தமான 24 ஹெக்டேர் திறந்தவெளி விவசாய வயலின் நடுவில், இந்திய வானிலை மையம் அமைத்துள்ள AWS எனப்படும் தானியங்கி வானிலை நிலையம், 56 டிகிரி செல்ஸியஸைப் பதிவு செய்தது. மற்றொரு இடத்தில் அமைந்துள்ள வானிலை மைய RMC AWS ல் 54 டிகிரி பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த பதிவு தவறாவது என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

28 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் செல்லும்போது, சென்சார்கள் செயலிழக்கத் தொடங்குவதால் வெப்பநிலை அறிவிப்பை தெரிவிக்கக்கூடாது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுபோல் தொடர்ச்சியாக தவறுகள் நடந்த வண்ணம் இருப்பதால் சரியாக வெப்பநிலையை கண்டறிவதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

இருப்பினும், இதுவரை இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலை என நம்பப்படும் டெல்லியின் வெப்பதாக்கத்தைக் காட்டிலும் நாக்பூரில் பதியப்பட்ட வெப்பநிலை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்பநிலை
வெப்பநிலை PT

அதிகரித்துள்ள வெப்பநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், சன் ஸ்ட்ரோக் என்ற வெப்ப வாதத்தினால் பல்வேறு மாநிலங்களில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

அப்படி, நேற்று மட்டும் பல்வேறு மாநிலங்களில் ஹீட் ஸ்ரோக் எனப்படும் வெப்பவாதத்தினால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 17 பேர் ஹீட் ஸ்ரோக்கால் உயிரிழந்துள்ளனர். இதேபோல், பீகார் மாநிலத்தில் 14 பேரும், ஒடிசாவில் ஐந்து பேரும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

heat stroke
heat strokept web

முன்னதாக மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில், தங்கள் தாய் மற்றும் பாட்டிக்கு மருந்துவாங்க மருந்தகத்திற்கு சென்ற இரண்டு சிறுவர்கள், ஹீட் ஸ்ரோக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெப்பம்
வாட்டி வதைக்கும் வெயில்; வெப்பவாதத்தால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com