\
DMK MPs Meet Amit Shah After Supporting Delimitation Bill
அமித்ஷா - கனிமொழிANI

அமித்ஷாவுடன் கனிமொழி சந்திப்பு.. பரபரக்கும் அரசியல் களம்!!

தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு கொடுத்தைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்ட திமுக எம்.பி. கள் சந்தித்துள்ளனர்.
Published on: 

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை வரும் திங்கட்கிழமை (நவம்பர் 30) நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அரசமைப்பு சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற 3இல் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, தற்போதைய சூழலில் 360 வாக்குகள் தேவை.

ஏற்கனவே, இந்த மசோதாவை கடந்த ஏப்ரலில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருந்த நிலையில் ,அப்போது போதிய பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா தோல்வியைத் தழுவியது. அதேபோல, இந்த மசோதா நகலை அப்போதைய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் எரித்திருந்தது தேசிய அளவில் கவனம் பெற்றிருந்தது.

Federal

இந்தச்சூழலில் தான், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ சதவீதம் குறையக்கூடாது உள்ளிட்ட 2 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவின் இந்த நிலைப்பாட்டிற்கு, தேர்தலுக்கு முன் கூட்டணியில் இருந்த விசிக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில் தான், தற்போது டெல்லியில் உள்ள அமித் ஷா இல்லத்தில், கனிமொழி, ஆ. ராசா, தாயாநிதிமாறன், டி.ஆர். பாலு ஆகிய திமுக எம்-பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியிருக்கின்றனர். தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்க முடிவு செய்திருக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது.

DMK MPs Meet Amit Shah After Supporting Delimitation Bill
தொகுதி மறுவரையறை | திமுக ஆதரவு நிலைப்பாடு.. அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும்! ஆதரவும்!