கட்சி நிர்வாகிக்கு பளார் விட்ட கர்நாடக துணை முதல்வர் DK சிவக்குமார்.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரை கன்னத்தில் பலமாக அறையும் வீடியோ காட்சியை கர்நாடக பாஜக வெளியிட்டுள்ளது.
DK சிவக்குமார்
DK சிவக்குமார்புதிய தலைமுறை

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், ஹவேரி மாவட்டம் சவனுர் பகுதியில் தேர்தல் பரப்புரைக்காக சென்றுள்ளார். இதற்காக அப்பகுதிக்கு சென்றநிலையில், காரில் இருந்து இறங்கிய டி.கே.சிவக்குமாரை அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது கூட்டத்திலிருந்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், டி.கே.சிவக்குமாரின் தோளில் கை வைத்து, புகைப்படம் எடுக்க முயன்றார்.

அப்போது திடீரென கோபமடைந்த டி. கே.சிவக்குமார், தோளில் கை வைத்த நபரின் கன்னத்தில் பலமாக தாக்கினார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலரும் அந்த நிர்வாகியை தள்ளிவிட்டார். இதுதொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

DK சிவக்குமார்
தலைப்புச் செய்திகள் | கன்னத்தில் அறைந்த டி.கே சிவகுமார் முதல் வெளியாக உள்ள +2 தேர்வு முடிவுகள் வரை!

இதனிடையே தாக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி, மாநகராட்சி வார்டு உறுப்பினர் அலாதின் மனியர் என்பது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை கர்நாடக பாஜக தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com