Gurpazpt desk
இந்தியா
அதிகாலை 3 மணிக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் செய்த பாராட்டுக்குரிய செயல்.. என்ன செய்தார் அப்படி?
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அருகே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் 500ரூபாய் தாள்களை வைத்து விட்டுச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ். இவர் தீபாவளி நாளான நேற்று அதிகாலை அகமதாபாத் நகரில் உள்ள சாலையில் நடந்து சென்றார்.
Rahmanullah gurpazpt desk
அப்போது வீடில்லாத ஏழை மக்கள் சாலையோரம் தூங்கிக் கொண்டிருப்பதை கண்ட அவர், ஒவ்வொருவரது அருகிலும் 500 ரூபாய் நோட்டுக்களை வைத்துச் சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ஏழை மக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பணத்தை வழங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
குர்பாஸின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாமல் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறினாலும், அந்த அணி சிறப்பாகவே விளையாடி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.