பூமிக்கடியில் புதைந்த ரகசியம்.. வெட்ட வெட்ட வந்த கிணறுகள் - அரிக்கமேட்டில் வெளிவந்த அதிசயம்!

சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புதுச்சேரியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நாகரீக மக்கள் வாழ்ந்த பெருநகரங்கள் பூமிக்கடியில் உள்ளதை அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து கிடைத்து வரும் உறைகிணறுகள் உறுதிப்படுத்துகின்றன
உறை கிணறுகள் கண்டுபிடிப்பு
உறை கிணறுகள் கண்டுபிடிப்புpt desk

செய்தியாளர்: ரகுமான்

பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என்று அழைக்கப்படும் புதுச்சேரி, 300 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டின் ஆதிக்கத்தில் சிறந்த கடல்வாணிப நகராக இருந்துள்ளது. அரியாங்குப்பம் அருகே இருக்கும் அரிக்கமேட்டில் கி.மு.200 முதல் கி.பி.200 வரை சர்வதேச கடல் வாணிபம் நடந்ததற்கான அரிய ஆதாரங்கள் 1930, 1945, மற்றும் 1950 ஆண்டுகளில் செய்யப்பட்ட அகழ்வராய்ச்சி மூலம் கிடைத்துள்ளன.

Puducherry
Puducherrypt desk

இங்கு பல்வேறு இடங்களில் உறைகிணறுகள் கண்டெடுக்கப்படும் நிலையில், தற்போது திருகாஞ்சி பஞ்சாயத்துக்குட்பட்ட கீழ் அக்ரஹாரம் கிராமத்தில் ஏரிக்கரையை சுத்தம் செய்தபோது சுந்தரராமன் என்பவர் சுடுமண்ணால் ஆன உறைகிணற்றை கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக இந்த உறைகிணற்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள சுடுமண் சுவர்நீரை சுத்திகரிக்கக் கூடிய தன்மை கொண்டது என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

உறை கிணறுகள் கண்டுபிடிப்பு
”சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீண்டாமையா? வேடிக்கை பார்க்க முடியாது” - நீதிபதிகள்

2300 ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் வணிக நகரமாக இருந்த அரிக்கமேட்டிற்கு அருகில் மண்பாண்டங்கள், கைகளால் நெய்ப்படும் துணிகள், மணி வகைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்யும் துணை நகரங்கள் ஏராளம் இருந்துள்ளதாகவும், புதுச்சேரியின் பூமிக்கடியில் பிரமாண்ட மதில் சுவர் சுற்றிக் கட்டப்பட்ட பெரிய நகரங்கள் உள்ளதாகவும் ஆச்சிரியப்படுத்தும் தகவல்களை கூறுகிறார் ரவிச்சந்திரன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com