\
டெல்லி SIR நோட்டீஸ் - உச்ச நீதிமன்றம் அதிருப்தி
டெல்லி SIR நோட்டீஸ் - உச்ச நீதிமன்றம் அதிருப்திai

’குழப்பத்தை ஏற்படுத்தும் டெல்லி SIR நோட்டீஸ்..’ உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

டெல்லி முதலமைச்சர் உட்பட சாமானியர்கள் என 30 லட்சம் பேருக்கு விவரங்கள் சரியில்லை என டெல்லியில் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Published on
Summary

டெல்லி SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் லாஜிக்கல் பிழை என்ற காரணத்தால் 33 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதில், முதலமைச்சர் ரேகா குப்தா, அரவிந்த் கெஜ்ரிவால், கபில் சிபல், எல்கே அத்வானி, மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய நபர்களும் உள்ளனர். உண்மைச் சரிபார்ப்பு இல்லாமல் இயந்திரத்தனமாக நோட்டீஸ் அனுப்பப்படுவதை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்து, முறையை மறுபரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நிரப்பப்பட்ட படிவங்களில் லாஜிக்கல் மிஸ்டேக் இருப்பதாக 33 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பல மூத்த அரசு அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களும் இடம்பெற்றுள்ளன.

முக்கியமாக இந்தப்பட்டியலில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஆகியோருக்கும் இதேபோன்ற முரண்பாடுகள் தொடர்பாக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து முன்னாள் துணை பிரதமர் எல்கே அத்வானி, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கும் மிஸ்டேக் இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர்
எஸ்.ஐ.ஆர் கோப்புப் புகைப்படம்

இப்படியான சூழலில் தான் டெல்லி வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தேர்தல் ஆணையம் இயந்திரத்தனமாக நோட்டீஸ் அனுப்புவதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மைச் சரிபார்ப்பு இல்லாமல் நோட்டீஸ் அனுப்பப்படுவதால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த முறையை மறுமதிப்பீடு செய்யுமாறும், வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் ஆவணங்களைப் பெறலாமா எனப் பரிசீலிக்குமாறும் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி SIR நோட்டீஸ் - உச்ச நீதிமன்றம் அதிருப்தி
ரேகா குப்தா, கெஜ்ரிவால் மட்டுமல்ல.. அத்வானி, மனிஷ் சிசோடியாவுக்கும் SIR நோட்டீஸ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com