\
Delhi Police Issues Guidelines for Journalists Covering Protests
மாணவர்கள் போராட்டம்ANI

போலீசார் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு.. பத்திரிக்கையாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்!!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தில் மூன்று பெண் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
Published on: 

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, ஜந்தர் மந்தரில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை செய்தியாக்கச் சென்ற 3 பெண் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பான புகார்கள், நியாயமான விசாரணைக்காக டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, பெண் போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், பெண் காவலர்கள் மூலம் அவர்கள் கண்ணியத்துடன் கையாளப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

கோப்புபடம்
கோப்புபடம்ANI

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஏசிபி விவேக் பகத் கூடுதல் துணை காவல் ஆணையர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இந்தப் பதவி உயர்வு ஏற்கனவே வழக்கமான நிர்வாக நடவடிக்கையாக பரிந்துரைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், விசாரணை முடியும் வரை புதிய பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என விவேக் பகத் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அந்தப் பதவி உயர்வு உத்தரவு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது.

Delhi Police Issues Guidelines for Journalists Covering Protests
ஜந்தர் மந்தர்: வானியல் அதிசயம்! போராட்டக் களமாக எப்படி மாறியது?

இதற்கிடையே, போராட்டங்களை செய்தியாக்கும் பத்திரிகையாளர்களுக்காக டெல்லி காவல்துறை சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் பிஐபி, டெல்லி தகவல் மற்றும் விளம்பரத்துறை அங்கீகார அட்டையை வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டையை எப்போதும் வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்றும், காவல்துறையின் நடவடிக்கைகளுக்கோ பாதுகாப்புப் பணிகளுக்கோ இடையூறு ஏற்படுத்தாத வகையில் செய்தி சேகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பதற்றமான சூழ்நிலைகளில் காவல்துறையினரிடம் இருந்து பாதுகாப்பான இடைவெளியை கடைபிடித்து, போராட்டங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Delhi Police Issues Guidelines for Journalists Covering Protests
Form 6 விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு சிக்கலா? உச்சநீதிமன்றம் கேட்ட முக்கிய கேள்வி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com