\
Can the Election Commissioner Be Removed From Office
Gyanesh KumarANI

Form 6 விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு சிக்கலா? உச்சநீதிமன்றம் கேட்ட முக்கிய கேள்வி!

உச்சநீதிமன்றத்தின் புதிய எச்சரிக்கையால், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைகள் தற்போது நீதிமன்றத்தின் தீவிர கவனத்துக்கு வந்துள்ளன.
Published on: 
Summary

Form 6 விவகாரத்தில், SIR நடவடிக்கையின் போது கூடுதல் Declaration Form சேர்க்கப்பட்டதா, அதை யார் அனுமதித்தது என உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. Form 6-ல் மாற்றம் செய்யப்பட்டதா என்பதைக் காட்டிலும், Declaration Form சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா என்பதே விசாரணையின் மையமாக உள்ளது.

செய்தியாளர் - M.மீரா

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான Form 6 தொடர்பான விவகாரத்தில், தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றத்தின் கேள்விகள் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, Special Intensive Revision எனப்படும் SIR நடவடிக்கையின்போது Form 6-ல் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்ட விவகாரத்தை நீதிமன்றம் தீவிரமாக கவனித்து வருகிறது.

அக்டோபர் 5-ம் தேதி தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, Form 6-ன் மாற்றப்பட்ட எந்த வடிவத்தையும் உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. மேலும், அந்த மாற்றத்தை யார் செய்தது, யாருடைய அனுமதியுடன் அது நடைமுறைக்கு வந்தது என்பதை தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையத்தின் பதிவுகளை நீதிமன்றம் கேட்டுள்ளது.

Form 6
Form 6instagram

புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க Form 6-ஐ பயன்படுத்துகின்றனர். SIR நடவடிக்கையின்போது, இந்தப் படிவத்துடன் கூடுதலாக ஒரு Declaration Form இணைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்னவென்றால், சட்டப்பூர்வமான Form 6-ல் மாற்றம் செய்யப்படவில்லை. SIR நடவடிக்கைக்காக மட்டுமே கூடுதல் Declaration Form சேர்க்கப்பட்டது என்பதுதான்.

Form 6-ஐ நிரப்புவதற்கு முன்பு Declaration Form-ஐ கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டிய நிலை இருந்ததா என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. அதாவது, “Form 6-ஐ மாற்றியது யார்?” என்ற கேள்வியைத் தாண்டி, “Form 6-ஐ சமர்ப்பிக்க அந்த கூடுதல் Declaration-ஐ கட்டாயமாக்கியது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

SIR முடிந்த மாநிலங்களில் இந்த கூடுதல் Declaration Form-ஐ ECINET தளத்திலிருந்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே நீக்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. SIR தொடர்பான சில முடிவுகள் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்படவில்லை என்றால், சட்டப்படி பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதா என்பதையும் நீதிமன்றம் பார்க்க உள்ளது.

Supreme Court Slams Cancer Drug Prices
supreme courtANI

பதிவுகளை ஆய்வு செய்த பிறகு, விதிமுறைகளை மீறி தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்தால், அந்த முடிவுகளை சட்டவிரோதமானவை என அறிவித்து ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விசாரணையின் மையக் கேள்வி, Form 6-ல் மாற்றம் செய்யப்பட்டதா என்பதைக் காட்டிலும், கூடுதல் Declaration சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா, அதை டிஜிட்டல் முறையில் கட்டாயமாக்கியது விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பதுதான்.

மேலும் பதிவுகளைப் பெற்று, இந்த நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பதை ஆய்வு செய்யும் கட்டத்தில்தான் வழக்கு உள்ளது.

Can the Election Commissioner Be Removed From Office
Wall Street கையில் இந்திய மருத்துவமனைகள்.. சிகிச்சை பில் எகிறுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com